SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அரசு நினைத்ததை விட வேகமாக தகவல்கள் வெளியாகிறது: காங்கிரஸ் தாக்கு

2019-02-12@ 01:44:50

புதுடெல்லி: ‘‘ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அரசு நினைத்ததைவிட வேகமாக புதிய தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன’’ என காங்கிரஸ் கூறியுள்ளது. ரபேல் விமான ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தலையிடுவதற்கு அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம், பாதுகாப்புத்துறை   செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த கடிதத்தின் நகல் ஆங்கில நாளிதழ் ஒன்றில் சில தினங்களுக்கு முன் வெளியானது. அதில், ‘ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக  பிரான்ஸ் குழுவினருடன் பிரதமர் அலுவலக அதிகாரிகள் தனியாக பேச்சுவார்த்தை நடத்துவது, இந்தியக் குழுவினர் நடத்தும் பேச்சுவார்த்தையை  பலவீனப்படுத்தும். எனவே, இந்த பேச்சுவார்த்தையிலிருந்து பிரதமர் அலுவலகம் விலகியிருக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இது நாடாளுமன்றத்தில்  பெரும் அமளியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரபேல் ஒப்பந்தத்தில் கொள்முதல் தொடர்பான ஊழல் தடுப்பு விதிமுறைகள், பிரான்ஸ் அரசு மூலம் பணம் செலுத்தும் விதிமுறைகள் போன்றவை  நீக்கப்பட்டதற்கு நிதி ஆலோசகர் சுதான்சு மொகந்தி அதிருப்தி தெரிவித்து கடந்த 2016ல் அனுப்பிய கடிதத்தின் நகலும் அதே ஆங்கில நாளிதழில் நேற்று  வெளியானது. மேலும் ஒப்பந்தத்துக்கு முன் கொள்முதல் விதிமுறைகளில் 8 முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனது. இதற்கு முன் இதுபோன்ற ஒப்பந்தம்  செய்யப்பட்டதில்லை என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பம் டிவிட்டரில் கூறியிருப்பதாவது: ரபேல் ஒப்பந்த தகவல்கள் அரசு நினைத்ததை விட வேகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. முதலில் 126 ரபேல் விமானங்கள் வாங்குவதற்கு பதிலாக 36  விமானங்களை வாங்க முடிவு செய்து அதன் விலையை அதிகரித்தது விமானத்தை விற்பனை செய்யும் டசால்ட் நிறுவனத்துக்கு கிடைத்த ஜாக்பாட்.  அடுத்ததாக  இந்த ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி, இந்திய குழுவினரின் பேச்சுவார்த்தை பயனற்றதாக்கியது.

தற்போது ராணுவ கொள்முதல் விதிமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது வெளிவந்துள்ளது. பிரான்ஸ் அரசின் உத்தரவாதம், வங்கி உத்தரவாதம்  இல்லாமல் பெருந்தொகை முன்பணமாக கொடுக்கப்பட்டுள்ளது. முறைகேடுக்கான அபராத பிரிவு, ஏஜென்ட் கமிஷனை தடுக்கும்பிரிவு உட்பட பல பிரிவுகள் இந்த  ஒப்பந்தத்தில் இல்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ‘‘மோடி ஜி.... ரபேல் ஒப்பந்தத்தில்  உத்தரவாதம், ஊழல் தடுப்பு, பிரான்ஸ் அரசு மூலம் பாதுகாப்பு அம்சங்களுடன் நிதி வழங்கும் பிரிவு போன்றவற்றை நீக்கியுள்ளீர்கள். எந்த ஊழலை மறைக்க  நீங்கள் விரும்பினீர்கள்? காவலாளி, திருடனாக உள்ளார் என இந்த நாடே கூறுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.

அனில் அம்பானி திருட கதவை திறந்த மோடி: ராகுல்
ரபேல் ஒப்பந்தத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டதாக நாளிதழில் வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ‘‘நமோ ஊழல்  தடுப்பு விதி. விமானப்படையிடம் இருந்து ரூ.30 ஆயிரம் கோடியை அனில் அம்பானி திருட, காவலாளியே கதவை திறந்து விட்டுள்ளார். காவலாளி திருடன்  என்பது தெளிவாக தெரிகிறது’’ என குறிப்பிட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • africaslavarieshouse

  1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

 • southwestchinaflo

  தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்