SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குருவாயூர் கோயிலில் ஒரே நாளில் 207 திருமணம்

2019-02-12@ 01:42:16

திருவனந்தபுரம்: குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 207 திருமணங்கள் நடந்தன. கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள  கிருஷ்ணன் கோயில் பிரசித்திப் பெற்ற கோயிலாகும். இங்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். இக்கோயிலில் முகூர்த்த நாட்களில் அதிகளவில்  திருமணங்கள் நடப்பது வழக்கம். நேற்று முன்தினம் முகூர்த்த நாள் என்பதால் ஏராளமான திருமணங்கள் நடந்தன. காலை 9 முதல் 12 மணிக்குள் உள்ள  முகூர்த்தத்தில் 207 திருமணங்கள் நடந்தன. கோயில் அருகே உள்ள 3 மண்டபங்களில் இந்த திருமணங்கள் நடந்தன. மணமக்களின் உறவினர்கள் கோயிலில்  குவிந்ததால் கோயில் வளாகம் முழுவதும் கடும் நெரிசல் ஏற்பட்டது.
 
பல ஜோடிகள் குறித்த நேரத்தில் திருமண மண்டபத்துக்கு செல்லவே சிரமப்பட்டனர். அதோடு கோயிலை சுற்றியுள்ள லாட்ஜ்கள் மற்றும் ஓட்டல்களும் நிரம்பி வந்தன. குருவாயூர் கோயிலில் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நேற்று முன்தினம் 851 குழந்தைகளுக்கு சோறு ஊட்டும்  நிகழ்ச்சியும் நடந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • africaslavarieshouse

    1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

  • southwestchinaflo

    தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

  • turkeyprotest

    துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

  • 21-08-2019

    21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்