SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலத்தில் பாதை பிரச்னையில் சடலத்துடன் 2 நாட்கள் போராட்டம் வழித்தடம் வழங்கிய பின் அடக்கம்

2019-02-12@ 01:30:05

சேலம்: சேலம் அருகே வழித்தட பிரச்னை காரணமாக பெண் சடலத்தை வைத்து 2 நாட்கள் தொடர் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். ஆர்டிஓ  பேச்சுவார்த்தையில் 4 அடியில் வழித்தடம் ஏற்படுத்திக் கொடுத்தபின், சடலத்தை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர். சேலத்தை அடுத்துள்ள சேலத்தாம்பட்டி பாவாயிவட்டம் மீன்வாயன்ஓடைப்பகுதியை சேர்ந்த செல்வராஜ் மனைவி மஞ்சுளா (31), கடந்த 9ம் தேதி இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது  உடலை வீட்டிற்கு கொண்டு வர அப்பகுதியில் உள்ள பழனிசாமி என்பவரது நிலத்தின் கம்பிவேலியை அகற்றினர். பின்னர் நேற்று முன்தினம், மீண்டும் அந்த  வழியே சடலத்தை எடுத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்தநிலையில், அந்த பாதையை பழையபடி பொதுவழித்தடமாக ஒதுக்கி தர மக்கள் கோரிக்கை வைத்தனர். இதை வலியுறுத்தி, சடலத்தை எடுத்துச் செல்லாமல் வீட்டு வாசலில் வைத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர்  சேகர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.  பழனிசாமி தரப்பில் பொது வழித்தடமாக மாற்ற அனுமதிக்க முடியாது எனத்தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் உதவி கமிஷனர் சேகர், சேலம் மேற்கு தாசில்தார் தீபசித்ரா பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,  அந்த பிரச்னைக்குரிய நிலம், ஆரம்ப காலத்தில் வண்டிதடமாக இருந்தது. அதனால், பொதுவழித்தடமாக ஒதுக்கி தர வேண்டும். அதுவரையில் சடலத்தை எடுத்துச்  செல்ல மாட்டோம் எனக்கூறினர். தொடர்ந்து 2வது நாளாக நேற்று காலையிலும் சடலத்தை எடுத்துச் செல்லாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். இதனிடையே  நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர், சேலம் கலெக்டர் ரோகிணியிடம் வழித்தடம் ஏற்படுத்தி தர கோரி மனு கொடுத்தனர். அதுபற்றி  விசாரித்து நடவடிக்கை எடுக்க அவர் ஆர்டிஓ செழியனுக்கு உத்தரவிட்டார்.  இதன்பேரில் அவர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், பிரச்னைக்குரிய இடத்தில் 4 அடிக்கு வழித்தடத்தை ஏற்படுத்த உத்தரவிட்டார். அதன்படி  பொக்லைன் இயந்திரம் மூலம் வழித்தடம் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின் மஞ்சுளாவின் சடலத்தை ஊர் மக்கள் எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்