SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவானிசாகர் அருகே பஸ்சை வழிமறித்த யானை கூட்டம்: பயணிகள் அலறல்

2019-02-12@ 01:28:06

சத்தியமங்கலம்:  பவானிசாகரில் இருந்து காராச்சிக்கொரை வழியாக தெங்குமரஹாடா கிராமத்துக்கு செல்ல அடர்ந்த வனப்பகுதியில் 25 கி.மீ., தூரம் பயணிக்க  வேண்டும். இதற்கு 2 அரசு பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பவானிசாகரில் இருந்து அரசு பஸ்  தெங்குமரஹாடா செல்வதற்காக காராச்சிக்கொரை வன சோதனைச்சாவடியை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது வனச்சாலையின் நடுவில் யானைகள்  கூட்டம் நின்றிருந்தன. இதை பார்த்த டிரைவர் பஸ்சை நிறுத்தினார். யானைகள் பஸ்சை நோக்கி ஓடி வந்ததால், பயணிகள் அலறினர். யானைகள் பஸ்சை  வழிமறித்து நின்று கொண்டே இருந்ததால், பயணிகள் அமைதியாக இருந்தனர். சுமார் ஐந்து நிமிடம் நின்றிருந்த யானைக்கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது.  இதையடுத்து பஸ் புறப்பட்டு சென்றது. யானைகள் பஸ்சை வழிமறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்