SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விவசாயிகள் சங்க துணைத் தலைவர் குற்றச்சாட்டு: அமைச்சர் மகன் கொடுத்த டார்ச்சரால் வேளாண் அதிகாரி மருத்துவ விடுப்பு: ஓராண்டாக விவசாயிகள் கடும் அவதி

2019-02-12@ 01:25:30

ஒரத்தநாடு: அமைச்சர் துரைக்கண்ணு மகன் டார்ச்சரால் வேளாண் அதிகாரி மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார் என விவசாயிகள் சங்க மாநில துணைத்  தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வேளாண் கோட்ட அலுவலகத்தில் கடந்த ஓராண்டு காலமாக உதவி இயக்குனர் இல்லாமல்  விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை கொண்டு செல்வதிலும், ஆலோசனை வழங்குவதிலும் பணிகள் முடங்கி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. மானிய விலையில்  விதை, உரம் மற்றும் இடு பொருட்கள் இந்த அலுவலகம் மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிலைமாறி ஆளும் அதிமுகவினர் தங்களது செல்வாக்கை  பயன்படுத்தி பொருட்களை அள்ளிசெல்லும் அவலம் நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மன வேதனையடைந்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து விவசாயிகள்  சங்க மாநில துணை தலைவர் கக்கரை ஆர்.சுகுமாறன் கூறியதாவது: ஓரத்தநாடு வேளாண் கோட்ட அலுவலகத்தில் உதவி இயக்குனர் பணியிடத்தில் ஓராண்டாக  யாரையும் நியமிக்காததால் நிர்வாக சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

 இந்நிலையில் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன் வீரபாண்டி, அவரது செல்வாக்கை பயன்படுத்தி ஒரத்தநாட்டிலிருந்த உதவி இயக்குனரை  ஓராண்டுக்கு முன்பாகவே இடமாற்றம் செய்து ஒரத்தநாடு அலுவலகத்தை காலியிடமாக்கினார்.இந்நிலையில் தஞ்சை காட்டுத்தோட்டம் வேளாண்மை  அலுவலகத்தில் விதை பரிசோதனை அலுவலராக இருந்த பிரபாகரன் என்பவரை தற்போது ஒரத்தநாடு வேளாண் உதவி இயக்குனராக மாற்றி அரசு  உத்தரவிட்டது.  இந்நிலையில், வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மகன் வீரபாண்டி. பிரபாகரனுக்கும் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் மன  உளைச்சலாகி அவர் மருத்துவ விடுப்பில் சென்று விட்டார். வேளாண்மை துறையை பொறுத்தவரை உதவி இயக்குனராக தேவைப்படும் இடத்திற்கு செல்ல ரூ.5  முதல் 10 லட்சத்தை அமைச்சரின் குடும்பத்திற்கு தர வேண்டும் என அதிகாரிகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமைச்சர் குடும்பத்தை கவனிக்காத அதிகாரிகள்  தண்டனை அனுபவிக்கும் விதத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இது தற்போது உச்சக்கட்டமாக வேளாண்மை துறை மூலம் நடைபெற்று வருகிறது. இதனால் பல  வேளாண்மை அதிகாரிகள் மன வேதனையுடனும், மன உளைச்சலுடனும் பணியாற்றி வருகிறார்கள்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்