காதலியை பார்ப்பதற்காக அரசு பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்
2019-02-12@ 01:23:51

கறம்பக்குடி: காதலியை பார்ப்பதற்காகவே பஸ்சில் பெட்ரோல் குண்டு வீசினேன் என்று கைதானவர் கூறியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் இருந்து புதுக்கோட்டைக்கு கடந்த 7ம் தேதி காலை அரசு பஸ் சென்றது. ரெகுநாதபுரம் செல்லும் வழியில் பிலாவிடுதி அருகே தைலமர காட்டில் இருந்துஒரு வாலிபர், டிரைவரை நோக்கி பெட்ரோல் குண்டை வீசியுள்ளார். அதிர்ஷ்டவசமாக யாரும் காயமின்றி தப்பினர்.இது தொடர்பாக கறம்பக்குடி போலீசார் 4தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடி வந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீசியவர் கறம்பக்குடியை சேர்ந்த பாண்டியன் (35) என்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், அவர் உறவினர் பெண் தினமும் அந்த பஸ்சில் ரெகுநாதபுரத்தில் உள்ள கல்லூரிக்கு சென்று வருகிறார். நான் அவரை சில மாதங்களாக ஒரு தலையாக காதலிக்கிறேன். அவரை பார்ப்பதற்காகவே பஸ்சை நிறுத்துவேன். சில நேரங்களில் பஸ் நிற்காமல் சென்றுவிடும். இதனால் பெட்ரோல் குண்டு வீசினேன் என்று கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பாண்டியனை ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
செவல்பட்டியில் நூலக கட்டிடத்தில் இயங்கும் பால்வாடி : இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு
புதுகை அருகே மாத்தூரில் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு கம்பெனிகள் மூடல் : 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு
18 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த தனி விமானம் மூலம் மதுரை வந்தார் அமித் ஷா..!
ராஜபாளையத்தில் தீ பிடித்து எரிந்த கரும்பு தோட்டம் : பல லட்சம் மதிப்பில் சேதம்
சொக்கிகுளம் முதல் ஊமச்சிகுளம் வரை 7.4 கி.மீ. நீள பறக்கும் பாலப்பணி தீவிரம் : நவீன தொழில் நுட்பத்தில் தூண்கள் அமைப்பு
பல ஆண்டுக்கு பின் வரும் பஸ் ரூட்டுக்கு இப்போதே ஸ்டாப்
அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்