SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சிகள் விரைவில் அறிவிக்கப்படும்: சென்னை திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேச்சு

2019-02-12@ 01:18:27

சென்னை: திமுக கூட்டணி எந்த அளவில்  அமைந்திருக்கிறது என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறோம் என்று மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னையில்  நேற்று நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஒரு நல்ல கூட்டணியை திமுகவைப் பொறுத்த வரை நாம் ஏற்கனவே  தோழமை கொண்டு அமைத்திருந்தாலும் அது முறையோடு அங்கீகாரத்தோடு விரைவில் திமுக கூட்டணி எந்த அளவில் அமைந்திருக்கிறது என்பதை அறிவிக்க  இருக்கிறோம். ஆனால் இன்னொரு கூட்டணி அமைகிற நிலையும் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆளும் கட்சியான அதிமுகவை பொறுத்தவரை யாரோடு  கூட்டணி அமைக்கப் போகிறார்கள் என்ற செய்தி தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நாடாளுமன்றத்  தேர்தலோடு சேர்த்து வைக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. வைத்துத்தான் தீரவேண்டும்.

காரணம் 6 மாதத்திற்கு மேல் எந்தத் தொகுதியிலும் சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பது சட்டம், விதிமுறை. ஆனால், அதையெல்லாம்  காலில் போட்டு மிதித்துவிட்டு நாடாளுமன்றத் தேர்தலோடு இந்தத் தேர்தலையும் தடுத்து நிறுத்துவதற்கான சூழ்ச்சிகளை இன்று, மோடி தலைமையிலான மத்திய  அரசு செய்து கொண்டிருக்கிறது. எனவே அது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறேன். பிரதமர் மோடி திருப்பூருக்கு  வந்து, தேர்தல் பிரசாரத்திலும், அரசு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சென்றார். அரசு நிகழ்ச்சி என்றால், சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்து துவங்கி நிகழ்ச்சி  முடிந்த பிறகு தேசிய கீதம் பாடும் முறை தொடர்ந்து இருந்து வந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே, மதுரைக்கு வந்தபோதும், திருப்பூர் வந்த போதும் அந்த  நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது வேதனைக்குரிய ஒன்று.  அதேநேரத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்று பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசுகிற  பொது தமிழில் பேசுகிறார். தமிழில் சகோதர, சகோதரிகளே என்று சொல்லுகிறார். திருவள்ளுவரை மேற்கோள் காட்டி குறளைச் சொல்லி பேசுகிறார் என்றால்,  மக்களை ஏமாற்றுகிற நிலையில் பிரதமர் மோடி இருந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இதை விட வேறு சாட்சிகள் தேவையில்லை. இன்று நாட்டில் இருக்கும்  சூழல்களை எண்ணிப்பார்த்து வரும் தேர்தலில் ஒரு நல்ல விடிவு காலத்தை தமிழகத்திற்கும், மத்தியிலும் ஏற்படுத்தித் தருவதற்கு துணை நிற்க வேண்டும்.  இவ்வாறு அவர் பேசினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_viruthu_iyo1

    அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்