உ.பி.யில் ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் தீவிரமாக செயல்படும்: ராகுல் பேச்சு
2019-02-12@ 01:13:52

லக்னோ: ‘‘உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்துடன், காங்கிரஸ் தீவிரமாக செயல்படும்’’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும், உ.பி கிழக்கு பகுதி பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்ச்சி உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் நேற்று நடந்தது. அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வந்திருந்தார். லக்னோவில் அவர்கள் ஊர்வலமாக சென்று காங்கிரஸ் தொண்டர்களை சந்தித்தனர். உடன் உ.பி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜோதிர்ஆதித்யா சிந்தியாவும் சென்றார். அப்போது ராகுல் பேசியதாவது:காங்கிரஸ் கட்சியின் நோக்கம் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுவது மட்டும் அல்ல, உ.பி.யிலும் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்துவதுதான். அதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக களத்தில் இறங்கும்.
உ.பி. நாட்டின் மத்திய பகுதி. உ.பி.யில் ஆட்சி அமைக்கும் வரை காங்கிரஸ் சோம்பலாக இருக்காது. அதற்கான பொறுப்பு பிரியங்கா மற்றும் சிந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு அநீதியை எதிர்த்து போராட வேண்டும் எனவும், உ.பி மக்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர்களிடம் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசிய ராகுல், ‘‘உத்தரப் பிரதேசம் மற்றும் நாட்டின் இதர மாநிலங்களில் பிரதமர் மோடி பணத்தை திருடி தொழிலதிபர் அனில் அம்பானிக்கு கொடுத்து விட்டார். அதனால் நீங்கள், ‘காவலாளி திருடன்’ என்ற கோஷத்தை முழங்குங்கள் என்றார். தொண்டர்களும் அவ்வாறே கோஷமிட்டனர்.
மேலும் செய்திகள்
அதிமுக - பாஜக பேச்சில் இழுபறி நிலையில் தேமுதிகவில் 24-ம் தேதி முதல் விருப்பமனு விநியோகம்... விஜயகாந்த் அறிவிப்பு
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு தீவிரம்; மதிமுக, வி.சி.க. முஸ்லீம் லீக் கட்சியுடன் இன்று ஆலோசனை
கர்நாடக கூட்டணி அரசை இரண்டரை முதல்வர்கள் ஆள்கிறார்கள் - அமித்ஷா
கூட்டணி அமைக்க விரும்பினால் கெஜ்ரிவால் என்னிடம் பேச வேண்டும் : ஷீலா தீட்சித் ஆவேசம்
ஆதி தமிழர் பேரவை நிர்வாகிகள் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு: தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு
தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது குறித்து முதல்வர், துணை முதல்வர் அவசர ஆலோசனை: கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு நடந்தது
அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி
22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்