SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘என் தலையில் மூளையை காணோம்’: கமிஷனரிடம் புகார் அளிக்க வந்தவரால் போலீசார் அதிர்ச்சி

2019-02-12@ 01:13:18

கோவை: கோவை போலீஸ் கமிஷனரிடம், தனது மூளையை காணவில்லை என புகார் அளிக்க வந்த நபரால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். கோவை போலீஸ்  கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று காலை ஒருவர் வந்தார். புகார் மனு தரவேண்டும் என வரவேற்பு பிரிவில் கூறிய அவரிடம் போலீசார் என்ன மனு, எது  தொடர்பாக புகார் தரவேண்டும் என கேட்டனர். அப்போது அவர், ‘‘அது ரொம்ப ரகசியமானது, நான் கமிஷனர் கிட்ட நேரடியாக பேசணும், ’’ எனக்கூறியுள்ளார்.  விவரம் சொன்னால் தான் புகார் தர முடியும் என போலீசார் கேட்ட போது, அதை கேட்காமல் கமிஷனர் அறையை நோக்கி அந்த நபர் வேகமாக சென்றார்.  போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்த போது, ‘‘ என் மூளையை காணோம், என்னை ஏமாத்தி என் மூளையை திருடிட்டாங்க, என்னால இப்ப யோசிக்க  முடியலை, என் மூளைய வெச்சி யாரோ என்னமோ பண்றாங்க, ’’ என்றார். அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் இருந்த ஆவணங்களை பார்வையிட்டு  விசாரித்த போது கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணமூர்த்தி (55) என்பதும் மன நிலை பாதித்து சிகிச்சை பெற்றதும் தெரியவந்தது. போலீசார்  அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்