SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐசிசி டி20 பந்துவீச்சு தரவரிசை 2வது இடத்துக்கு

2019-02-12@ 00:31:19

முன்னேறினார் குல்தீப்: கோஹ்லிக்கு பின்னடைவு
துபாய்: டி20 போட்டிகளுக்கான ஐசிசி பந்துவீச்சு தரவரிசை பட்டியலில், இந்திய ஸ்பின்னர் குல்தீப் யாதவ் 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று வெளியிட்ட தரவரிசையில்,  பாகிஸ்தான் அணி 135 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்தியா (124), தென் ஆப்ரிக்கா (118), இங்கிலாந்து (118) அடுத்த இடங்களில் உள்ளன.பந்துவீச்சாளர்களுக்கான ரேங்கிங்கில் ஆப்கானிஸ்தானின் ரஷித்  கான் 793 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த கடைசி டி20 போட்டியி சிறப்பாக செயல்பட்ட இந்திய சுழல் குல்தீப் யாதவ் ஒரு இடம் முன்னேறி 2வது இடத்தை  பிடித்துள்ளார். தரவரிசையில் அவர் முதல் முறையாக 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

அதிரடியாக ரன் குவித்த நியூசிலாந்து தொடக்க வீரர்கள் டிம் செய்பெர்ட், கோலின் மன்றோ இருவரையுமே குல்தீப் ஆட்டமிழக்க செய்தது குறிப்பிடத்தக்கது. டாப் 10ல் குல்தீப் தவிர்த்து வேறு இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும்  இடம்பெறவில்லை. யஜ்வேந்திர சாஹல் 6 இடம் பின்தங்கி 17வது இடத்தில் உள்ளார். இந்திய வேகம் புவனேஷ்வர் குமார் 18வது இடத்தில் நீடிக்கிறார்.பேட்டிங் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் ஆஸம் 885 புள்ளிகளுடன்  முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் ரோகித் ஷர்மா 7வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 10வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்து டி20 தொடரில் விளையாடாததால், கேப்டன் விராத் கோஹ்லி பின்னடைவை  சந்தித்துள்ளார். அவர் 4 இடம் பின்தங்கி 19வது இடத்தில் உள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்