SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஸ்ட் இண்டீசுடன் 3வது டெஸ்ட் இங்கிலாந்து வலுவான முன்னிலை

2019-02-12@ 00:31:18

செயின்ட் லூசியா: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் வலுவான முன்னிலை பெற்றது.கிராஸ் ஐலெட், டேரன் சம்மி தேசிய ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும்  இப்போட்டியில், டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன் குவித்து ஆல் அவுட்டானது. பட்லர் 67 ரன், பென் ஸ்டோக்ஸ் 79 ரன் விளாசினர். வெஸ்ட் இண்டீஸ்  பந்துவீச்சில் கெமார் ரோச் 4, கேப்ரியல், ஜோசப், கீமோ பால் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 47.2 ஓவரில் 154 ரன் மட்டுமே சேர்த்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. கேம்ப்பெல்  41, டோரிச் 38, கேப்டன் பிராத்வெய்ட் 12, கெமார் ரோச் 16* ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட் 8.2 ஓவரில் 2 மெய்டன் உட்பட 41 ரம் விட்டுக்கொடுத்து 5  விக்கெட் கைப்பற்றினார். மொயீன் அலி 4, பிராடு 1 விக்கெட் வீழ்த்தினர்.123 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன் எடுத்திருந்தது.நேற்றைய 3ம் நாள் ஆட்டத்தில் அந்த அணி நிதானமாக விளையாடி ரன் சேர்த்தது.

டிண்டா காயம்
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த பயிற்சி டி20 ஆட்டத்தில், பெங்கால் அணி வேகப் பந்துவீச்சாளர் அஷோக் டிண்டா படுகாயம் அடைந்தார். பேட்ஸ்மேன் வேகமாக அடித்த பந்தை பிடித்து அவுட்டாக்க  முயன்றபோது, அது டிண்டாவின் தலையில் பலமாகத் தாக்கியது. இதனால் அவர் களத்திலேயே சுருண்டு விழுந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்டு எழுந்த அவர் ஓவரையும் பூர்த்தி செய்தார். ஸ்கேன் பரிசோதனை செய்ததில்,  பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் 2 நாள் ஓய்வெடுக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

பண்டாரிக்கு அடி, உதை
இந்திய அணி முன்னாள் வேகம் அமித் பண்டாரி. இவர் தற்போது டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வுக் குழு தலைவராக உள்ளார். செடின்ட் ஸ்டீபன்ஸ் மைதானத்தில் டெல்லி அணி நேற்று விளையாடிய பயிற்சி ஆட்டத்தை  மேற்பார்வையிட்டபோது, யு-23 அணி தேர்வின்போது இவரால் புறக்கணிக்கப்பட்ட ஒரு வீரர் ரவுடி கும்பலுடன் வந்து பண்டாரியை சரமாரியாக அடித்து உதைத்துவிட்டு தப்பியோடினார். இந்த தாக்குதலில் தலை மற்றும் காதில்  படுகாயம் அடைந்த பண்டாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இரானி கோப்பை இன்று தொடக்கம்
ரஞ்சி சாம்பியன் விதர்பா அணியுடன் இதர இந்திய அணி மோதும் இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி, நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது. அஜிங்க்யா ரகானே தலைமையிலான ரெஸ்ட் ஆப்  இந்தியா அணியில் இளம் வீரர்கள் மயாங்க் அகர்வால், ஷ்ரேயாஸ் அய்யர், ஹனுமா விஹாரி ஆகியோர் களமிறங்குவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 21-04-2019

  21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 20-04-2019

  20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • iyesumakal11

  இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்