SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் மீதான வழக்கில் இந்த வாரம் விசாரணை: உச்ச நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

2019-02-12@ 00:05:08

சென்னை: அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கு இந்த வாரமே விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் தற்போதைய துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என  திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் திமுக தரப்பு வழக்கறிஞர் கபில் சிபில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஏகே.சிக்ரி, அப்துல் நசீர் ஆகியோர் முன்னிலையில் ஒரு கோரிக்கையை நேற்று வைத்தார்.

அதில்,”தமிழகத்தில் தற்போது இருந்து வரும் அரசியல் சூழலில் துணை முதல்வரான ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதனால் இந்த விவகாரத்தில் வழக்கை விரைந்து விசாரித்து நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.  இதுகுறித்து கடந்த வாரம் கோரிக்கை வைக்கப்பட்ட போது பிப்ரவரி 7ம் தேதி விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால் இதுவரை வழக்கு பட்டியலிடப்படவில்லை என வலியுறுத்தினார். இதையடுத்து திமுக தரப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கை இந்த வாரமே பட்டியலிட்டு விசாரணை மேற்கொள்வதாக நேற்று அதிரடியாக அறிவித்தனர்.இதையடுத்து மேற்கண்ட வழக்கில் விரைவில் ஒரு இறுதி உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_viruthu_iyo1

    அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்