SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் தனி நபர் வருவாய் குறைந்துவிட்டது: விஜயதரணி பேச்சு

2019-02-12@ 00:03:50

சென்னை: சட்டப் பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீது விவாதம் நடந்தது. அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் விஜயதரணி, தமிழகத்தில் தனி நபர் வருவாய் குறைந்துவிட்டது என்று தெரிவித்தார்.
விளவங்கோடு விஜயதரணி, (காங்கிரஸ்); 2019-2020ம் நிதி நிலை அறிக்கையில் பக்கத்துக்கு பக்கம், மத்திய அரசின் நிதி வரவில்லை என்றே கூறப்பட்டுள்ளது.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:மத்திய அரசின் நிதி தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலுரையில் விவரமாக தெரிவிக்கப்படும். விஜயதரணி: உண்மை நிலையை வெளியில் எடுத்து சொன்னால் தான் தெரியும் என்பதால் கூறினேன். தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி என்பது 2011ல் 12.4 சதவீதம், 2016ல் 13 சதவீதம், என்று கூறப்பட்டுள்ளது. 14வது நிதிக்குழு பரிந்துரைக்கு முன் பின் என்று பார்த்தால்2013-2014 வரை, 2017-2018 வரை 10.8 சதவீதம் இருந்தது.

அதேபோல 2019ல் உத்தேச வளர்ச்சி 8.6 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவு.இதனால் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். தமிழகத்தில் தனி நபர் வருவாய் குறவைாக உள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: மத்திய அரசின் வளர்ச்சியை ஒட்டித்தான் மாநில அரசின் வளர்ச்சியும் இருக்கும். மத்திய நிதிக்குழுவானது மாநிலத்துக்கு வழங்கும் நிதியை படிப்படியாக குறைத்துள்ளது.மானியத் தொகையும் குறைக்கப்பட்டுள்ளது.அதிமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் நிலையான வளர்ச்சி எட்டியுள்ளது என்பதற்கு புள்ளி விவரங்கள் உள்ளது.  விஜயதரணி: தனி நபர் வருவாய் என்பது 11 சதவீதம் குறைந்துள்ளது. 2019ல் தனி நபர் உயரும் என்று கூறப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது, அதாவது 1 கோடியை தாண்டி இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் இன்னும் குறையும் நிலை ஏற்படும். ஊரக வளர்ச்சியை பொறுத்தவரையில் 21 சதவீதம் குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பற்றாக்குறை மூலம் திட்டங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

கடனை பொறுத்தவரையில் ரூ.4 லட்சம் கோடி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பொதுத்துறைக் கடன்களையும் சேர்த்தால் ரூ.6 லட்சம் கோடியை தாண்டும். அதேபோல கல்வி, ஊரகத்துறை, போன்ற வற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் குறைவாகவே உள்ளது. விஜயதரணி: மத்திய அரசு பற்றி நான்கூறிய ெசாற்களை நீக்கக் கூடாது. காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் ராமசாமி: தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு வஞ்சம் செய்கிறது. அது குறித்து உறுப்பினர் விஜயதரணி தெரிவித்தார். அதில் என்ன தவறு இருக்கிறது.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்: மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில், கடந்த 9 வது நிதிக் குழு முதல் 16வது நிதிக்குழு வரையில் படிப்படியாக தமிழகத்துக்கான நிதி குறைக்கப்பட்டு வருகிறது. அதில் 2013ம் ஆண்டில் மட்டும் அதிகரித்தது. அமைச்சர் ஜெயக்குமார்: மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் போது ஆதரவு தெரிவிப்போம். எதிர்க்கும் போது எதிர்ப்போம். தமிழர்கள் இறந்தபோது எங்கே போனீர்கள்? விஜயதரணி: ஜாக்டோ-ஜியோ பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி நல்ல நடவடிக்கை எடுத்து அதற்கு நல்ல முடிவு காண வேண்டும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • intelexopchina17

    சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் எக்ஸ்போ: Audi உள்ளிட்ட நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • 17-07-2019

    17-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • DongriBuildingCollapse

    மும்பையில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து பெரும் விபத்து: 12 பேர் உயிரிழப்பு..மீட்பு பணிகள் தீவிரம்!

  • KyrgyzstanSlapping

    ஒருவரை ஒருவர் கன்னத்தில் பளார் பளாரென அறையும் வித்தியாசமான போட்டி: கிர்கிஸ்தானில் நடைபெற்றது!

  • ChangchunZoologicalPark

    உயிரியல் பூங்காவில் உள்ள மரங்களில் விலங்குகளை தத்ரூபமாக வரையும் கலைஞர்: ஆச்சரியமூட்டும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்