SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மக்களவை தேர்தலில் பாமக கூட்டணியில் தேமுதிக சேரக்கூடாது: கட்சியினர் கடும் எதிர்ப்பு

2019-02-12@ 00:03:08

சென்னை: மக்களவை தேர்தலில் பாமக இருக்கும் கூட்டணியில் தேமுதிக சேரக்கூடாது கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் பொறுத்தவரையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் திமுக விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிகிறது.  அதே நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் பாஜவை சேர்க்க கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணியில் போட்டியிடுமா? என்ற நிலை உருவாகியுள்ளது.

பெரும்பாலும் கூட்டணி அமைத்து போட்டியிடவே தேமுதிக விரும்புவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் தேமுதிக இடம் பெறும் கூட்டணியில் பாமக இடம் பெறக்கூடாது என்பதில் தேமுதிக கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறது. அவர்கள் கூட்டணியில் இருந்தால் ஒரு போதும் அந்த கூட்டணியில் சேரக்கூடாது என்று கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ கூட்டணியில் தேமுதிக, மதிமுக, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இதில் தேமுதிக 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஒரு தொகுதியிலும் கூட தேமுதிக வெற்றி பெறவில்லை.

அந்த தேர்தலில் கூட்டணியில் இருந்த பாமக தேமுதிகவினர் போட்டியிட்ட இடங்களில் வேலை பார்க்கவில்லை. தேமுதிகவை தோற்கடிக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டனர். அதற்கான வேலைகளில் தான் அவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். கூட்டணி தர்மத்தை அவர்கள் கடைப்பிடிக்கவில்லை என்று தேமுதிகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த முறையும் கூட்டணி அமைத்தால் அதே நிலை தான் நீடிக்கும். எனவே, தேமுதிக இடம் பெறும் கூட்டணியில் பாமக இடம் பெறக்கூடாது என்பதில் தேமுதிவினர் உறுதியாக இருந்து வருகின்றனர். விஜயகாந்த் உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. அவர் வந்ததும் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க போகிறது என்பதை அவர் அறிவிப்பார் என்று தேமுதிக வட்டாரத்தில் கூறப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi_viruthu_iyo1

    அமைதிக்கான விருது, காந்தி சிலை திறப்பு : பிரதமர் மோடியின் தென் கொரிய பயண புகைப்படங்கள்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

  • 20-02-2019

    22-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • perufloodrain

    பெருவில் கனமழை : கரைபுரண்டு ஓடும் வெள்ளத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

  • himachal

    இமாச்சலப் பிரதேசத்தில் பனிச்சரிவு: ராணுவ வீரர் பலி, 5 வீரர்களை தேடும் பணி தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்