வெவ்வேறு விபத்துகளில் ஆசிரியர் உட்பட 2 பேர் பலி
2019-02-11@ 19:01:56

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் வடக்கு ரத வீதியை சேர்ந்தவர் மணிமாறன்(51). தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் தொட்டியாங்குளம் விலக்கில் டூவீலரில் சாலையை கடக்க முயன்றார். அப்போது தூத்துக்குடியில் இருந்து மதுரை நோக்கி வந்த கார், டூவீலர் மீது மோதியது. படுகாயமடைந்த மணிமாறன் மதுரைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
அருப்புக்கோட்டை டவுன் போலீசார், மதுரையை சேர்ந்த கார் டிரைவர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். அருப்புக்கோட்டை அருகே கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமன்(55). தனியார் திருமண மண்டப ஊழியர். இவர் நேற்று தள்ளுவண்டியில் பொருட்களை ஏற்றி கொண்டு கஞ்சநாயக்கன்பட்டி விலக்கில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்ற போது, அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. படுகாயமடைந்த ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் படுகாயம்
வத்திராயிருப்பு ஆகாசம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் இளையராஜா(38). எல்ஐசி ஏஜென்ட். இவர் நேற்று இரவு டூவீலரில் தம்பிபட்டி சென்றார். மாவூத்து விலக்கு அருகே எதிரே ரெங்கபாளையத்தை சேர்ந்த வெற்றிசெல்வம் ஓட்டி வந்த டூவீலர் மோதியது. இதில் படுகாயமடைந்த இளையராஜா விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வத்திராயிருப்பு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
வானில் ‘சூப்பர் மூன்’: பார்த்து ரசித்த பொதுமக்கள்: அடுத்தது 2026ல் தான் தெரியும்
வழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதா?: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
திருப்பதி கோயில் விடுதி வசதிகள் தமிழக கோயில்களில் ஏன் இல்லை:அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
கர்ப்பிணிகள் அலறியடித்து ஓட்டம்: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வெடித்து சிதறியது கொதிகலன்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 86 ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு
கிருஷ்ணகிரி டிஎஸ்பி வீட்டில் சிக்கிய 4.34 லட்சம்
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்