SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடியில் இரவில் பயங்கரம் பார் ஊழியர் அடித்துக் கொலை: தம்பிக்கு வலை

2019-02-11@ 19:00:20

தூத்துக்குடி: தூத்துக்குடி டிஎம்பி காலனி மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவருக்கு சிவமுருகன் (38), ஆபிரகாம் (36), ராஜலிங்கம் (33) ஆகிய 3 மகன்கள். சிவமுருகனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்று விட்டார். தற்போது தூத்துக்குடி மையவாடி பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் சிவமுருகன் வேலை பார்த்து வந்தார். பின்னர் கிடைக்கும் நேரத்தில் மையவாடியில் உள்ள மின் தகன மேடையிலும் சிறுசிறு வேலைகளை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கமம் இருந்தது. பெரும்பாலான நாட்களில் வீட்டுக்கே செல்லாமல் குடித்துவிட்டு சுற்றி திரிந்துள்ளார். இவ்வாறு இவர் வீட்டு செலவுக்கு பணம் கொடுக்காமல் பொறுப்பற்று இருந்ததால் இவருக்கும், இவரது தம்பி ஆபிரகாமுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்றிரவு 11 மணி அளவில் சிவமுருகன் குடிபோதையில் வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆபிரகாமையும், குடும்பத்தினரையும் அவதூறாக பேசியுள்ளார்.

இதில் ஆத்திரம் அடைந்த ஆபிரகாம் அங்கு கிடந்த விறகு கட்டையால் சிவமுருகனின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த சிவமுருகன் ரத்தம் சொட்ட சொட்ட மயங்கி விழுந்தார்.
தகவலறிந்த தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிவமுருகனை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று காலை 4 மணி அளவில் அவர் இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக தம்பி ஆபிரகாமை தூத்துக்குடி தென்பாகம் போலீசார் தேடி வருகின்றனர். குடிபோதையில் அவதூறாக பேசிய அண்ணனை தம்பியே அடித்துக் கொன்ற சம்பவம், தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்