SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீண்டும் விசாரணைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம்

2019-02-11@ 18:50:31

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என  தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. பிப்ரவரி 24-ம் தேதியுடன் கால அவகாசம் முடிவடைய உள்ள நிலையில் தற்போது இந்த கோரிக்கையை வைத்து தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மறைந்த முதலமைச்சர் மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதுவரை 3 முறை கால நீட்டிப்பு செய்யப்பட்டு தற்போது 4-வது முறையாக கால அவகாசத்தை நீட்டிப்பு செய்வதற்கான கடிதத்தை தமிழக அரசுக்கு ஆறுமுகசாமி ஆணையம் அனுப்பியுள்ளது.

பிப்.24-ம் தேதி அவகாசம் முடிவடைகிறது. இதற்கு முன்பாக அப்பல்லோ மருத்துவ குழு அமைத்து தான் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி ஆறுமுகசாமி தள்ளுபடி செய்ததால் அப்பல்லோ நிர்வாகம் தற்போது நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடர்ந்து அதற்கான விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையில் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணையில் எவ்வித தடையும் இல்லை. ஆனால் இது தொடர்பான விளக்கத்தை வரும் வெள்ளிக்கிழமை அளிக்குமாறு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே ஆணையம் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் பிப்.24-ம் தேதி காலக்கெடு முடிவடைய கூடிய நிலையில் மீண்டும் இரண்டரை மாதங்கள் அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதமானது எழுதப்பட்டுள்ளது. அப்பல்லோ மருத்துவர்களிடம் குறுக்கு விசாரணை இன்னும் 10 பேரிடம் செய்ய வேண்டியுள்ளது. அவர்களுக்கு தேதி ஒதுக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய சசிகலா தரப்பினர் இருக்கிறார்கள்.

ஆகவே இவை அனைத்தும் முடிவடைய கால அவகாசம் தேவைப்படுவதன் காரணமாக 4-வது முறையாக ஆணையம் அவகாசம் கேட்டு கடிதம் எழுதியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 27ம் தேதி 2016-ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த ஆணையமானது தொடர்ச்சியாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mamtateashop

    மேற்குவங்க கிராமத்தின் டீ கடையில் முதல்வர் மம்தா பானர்ஜி: தேநீர் தயாரித்து மக்களுக்கு வழங்கிய காட்சிகள்!

  • chidambaramprotest

    ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் பேரணி நடத்த முயன்ற காங்கிரஸ் தொண்டர்கள் கைது!

  • delhiprotest22

    காஷ்மீரில் சிறை வைக்கப்பட்டுள்ள தலைவர்களை விடுவிக்கக்கோரி டெல்லியில் திமுக உள்ளிட்ட 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்: புகைப்படங்கள்

  • sandisreal

    இஸ்ரேலில் சர்வதேச மணற்சிற்ப கண்காட்சி: புகழ்பெற்ற animation கதாபாத்திரங்களை வடிவமைத்த கலைஞர்கள்

  • roborestaurantbang

    பெங்களூரில் வந்தாச்சு முதல் ரோபோ உணவகம்: ஆர்வத்துடன் வரும் வாடிக்கையாளர்கள்...புகைப்படங்கள்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்