SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டாஸ்மாக் கடைகள் மூலம் 2017-18-ம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய்

2019-02-11@ 17:52:42

சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2017-18 ம் ஆண்டிற்கான தமிழக அரசின் வருவாய் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு வாணிப கழகம் தாக்கல் செய்துள்ள 35-வது ஆண்டறிக்கையில், 2017-18 ல் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 5000 டாஸ்மாக் கடைகள் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன. இந்த டாஸ்மாக் கடைகள் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானம் மற்ற துறைகளில் கிடைக்கு வருமானத்தை விடவும் மிகவும் அதிகமானது ஆகும்.

சாதாரண நாட்களில் டாஸ்மாக் மூலம் சராசரியாக ரூ.70 கோடி அளவுக்கு வருமானம் கிடைக்கிறது. அதே பண்டிகை நாட்களில் ரூ.100 கோடி அல்லது அதற்கும் மேல் அதிக வருமானம் கிடைக்கிறது. இந்நிலையில் தற்போது தமிழக டாஸ்மாக் கடைகள் மூலம் 2017-18 ஆம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு ரூ.26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளது டாஸ்மாக் 35-வது ஆண்டறிக்கையின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதனுடையே டாஸ்மாக் கடைகளை பாதுகாக்கும் விதமாக டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் கடந்த ஆண்டு முடிவு செய்தது. அதன்படி முதற்கட்டமாக தற்போது 3,000 டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கடைக்கு 2 கண்காணிப்பு கேமரா வீதம் 3,000 கடைகளுக்கு 6,000 கேமராக்களைப் பொருத்த 5 கோடி மதிப்பிலான டெண்டரினை டாஸ்மாக் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்