தஞ்சையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் ஊழல்: அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம்
2019-02-11@ 17:28:39

தஞ்சாவூர்: பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டதாக கூறி ரூ.5 கோடி அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. தஞ்சை மாவட்டம் முதலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெண்டையம்பட்டி, முல்லைக்கொடி, தீட்சசமுத்திரம் உள்ளிட்ட கிராமங்களில் வீடுகள் கட்டாமலேயே கட்டி முடிக்கப்பட்டதாக கணக்கு கட்டப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதேபோன்று தஞ்சை சுற்றுவட்டாரத்தில் 100 நாள் வேலை திட்டத்திலும் போலியாக கணக்குக்காட்டி ஊழல் நடைபெற்று வருவதாக கிராமமக்கள் புகார் கூறியிருக்கின்றனர். சம்பந்தப்பட்ட இடங்களில் விசாரணை நடத்தி ஊழல் செய்பவர்களை தண்டிக்க வேண்டும் என்று கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் செய்திகள்
வானில் ‘சூப்பர் மூன்’: பார்த்து ரசித்த பொதுமக்கள்: அடுத்தது 2026ல் தான் தெரியும்
வழிபாட்டு தலங்களில் உள்ள கூம்பு ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டதா?: டிஜிபிக்கு ஐகோர்ட் உத்தரவு
திருப்பதி கோயில் விடுதி வசதிகள் தமிழக கோயில்களில் ஏன் இல்லை:அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
கர்ப்பிணிகள் அலறியடித்து ஓட்டம்: அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வெடித்து சிதறியது கொதிகலன்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உபரியாக உள்ள 86 ஆசிரியர்களை அரசு கல்லூரிகளில் பணியமர்த்த எதிர்ப்பு
கிருஷ்ணகிரி டிஎஸ்பி வீட்டில் சிக்கிய 4.34 லட்சம்
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்
சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது
காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்