SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மொழிப் பெயர்ப்பு சேவையான கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் தகவல் திருட்டு : அதிர்ச்சி தகவல்

2019-02-11@ 16:32:46

வாஷிங்க்டன் : இணையதள தேடுபொறிக்கு பெயர்போன கூகுள் நிறுவனத்தின் மொழிப் பெயர்ப்பு சேவையான கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நாளும் புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தி வரும் டிஜிட்டல் உலகில், தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது மிக பெரிய சவாலாகவே உள்ளது. சில போலி இணையதளங்களின் மூலம் பயனர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்படுவதாகவும் பணப்பரிவர்த்தனை மூலம் ஏமாற்றப்படுவதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் மொழிப் பெயர்ப்பு சேவையான கூகுள் ட்ரான்ஸ்லேட் மூலம் பயனர்களின் பெயர், ஈ மெயில் முகவரி, பாலினம், பணி செய்யும் இடம் போன்ற தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனை தொடர்பாக கூகுள் நிறுவனம் பதில் அளிக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் தகவல் திருட்டு காரணமாக கூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் சமூக வலைத்தளம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

  • france_modi11112

    பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

  • cleb_11_kri

    கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்