SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

7 பேர் விடுதலை குறித்து ஆளுநரிடம் மனு அளிக்க நளினி தாயார் முயற்சி: சிறையில் முருகன், நளினி தொடர்ந்து உண்ணாவிரதம்

2019-02-11@ 16:01:39

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் 7 பேரை விடுதலை செய்யக்கோரி, ஆளுநர் மாளிகைக்கு மனு அளிக்க சென்ற நளினியின் தாயார் ஆளுநரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து மனு அளிக்க நளினியின் தாயார் பத்மா இன்று காலை வருகை தந்தார். அப்போது ஆளுநர் பன்வாரிலால், காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக மதுரை சென்றுவிட்டதாக ஆளுநர் மாளிகை காவலர்கள் தெரிவித்தனர்.

ஆளுநர் சென்னை திரும்பியதும் சந்திக்க நேரம் ஒதுக்கப்படும் என்று காவலர்கள் கூறியதை அடுத்து பத்மா அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதனிடையே 7 பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்காத ஆளுநரை கண்டித்து வேலூர் மத்திய சிறையில் முருகன் பத்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார். முருகனுக்கு ஆதரவாக மகளிர் சிறையில் உள்ள நளினியும் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MummifiedFoal

    42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

  • SriLankaHomage

    இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

  • selphiGorilla

    கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

  • QingdaoNavalParade

    சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

  • CaucaLandslide

    கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்