SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யக் கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு

2019-02-11@ 15:20:32

புதுடெல்லி: 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யக்கோரிய வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்தது. இதையடுத்து, இந்த வாரமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

வழக்கு கடந்து வந்த பாதை


ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். அவரை நீக்கிவிட்டு சசிகலா முதல்வராக முயன்றார். இதையடுத்து ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கினார்.இதனிடையே சசிகலா சிறைச்செல்ல எடப்பாடி பழனிசாமி முதல்வரானார்.கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக  சட்டப் பேரவையில்  எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.அப்போது பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், மாபா.பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதனையடுத்து அவர்களை தகுதிநீக்கம் செய்யக்கோரிய மனுக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி, தி.மு.க. கொறடாவும், எம்எல்ஏவுமான சக்கரபாணி மற்றும் டி.டி.வி.தினகரன் ஆதரவு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல் மற்றும் தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது ஏ.கே.சிக்ரி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

திமுக முறையீடு


கடந்த முறை வழக்கு விசாரணை வந்த போது வழக்கை பிப்ரவரி 7ம் தேதிக்கு  நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். ஆனால் அன்று வழக்கு பட்டியலிடப்படவில்லை. இந்நிலையில் வழக்கறிஞர் கபில்சிபல் நீதிபதி ஏ.கே.சிக்ரி அமர்வில் 11 எம்எல்ஏக்கள் வழக்கை விரைந்து விசாரிக்க கோரிக்கை வைத்தார். ஏற்கனவே 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு ஏற்கனவே வெளியாகி விட்ட நிலையில், இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வரவில்லை என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து, இந்த வாரமே தகுதி நீக்க வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி அறிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • SriLankaHomage

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

 • selphiGorilla

  கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

 • QingdaoNavalParade

  சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்