SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐகோர்ட் உத்தரவை மீறி கட்டிட பணி தடுக்க சென்ற பெண் ஐஏஎஸ் அதிகாரியை ஒருமையில் திட்டிய கேரள எம்எல்ஏ

2019-02-11@ 01:00:54

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மூணாறில் ஐகோர்ட் உத்தரவை மீறி பஞ்சாயத்து சார்பில் நடக்கும் கட்டிட பணியை தடுக்க சென்ற பெண் சப் கலெக்டரை மார்க்சிஸ்ட் எம்எல்ஏ ஒருமையில் திட்டியது பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மூணாறு அருகே உள்ள தேவிகுளம் சப் கலெக்டராக இருப்பவர் ரேணுராஜ். ஐஏஎஸ் பெண் அதிகாரியான இவர் தேசிய அளவில் இரண்டாவதாக தேர்ச்சி பெற்றவராவார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான்  தேவிகுளம் சப் கலெக்டராக இவர் நியமிக்கப்பட்டார். பதவியேற்ற உடனே ஆக்ரமிப்புகளை அகற்றுவது உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் பழைய மூணாறு பகுதியில்  முதிரப்புழையாற்றின் கரையில் பஞ்சாயத்து சார்பில் மகளிர் தொழில் மையத்திற்கான கட்டிட பணிகள் நடந்து வருகின்றன. இது அடிக்கடி வெள்ளம் வரும் பகுதியாகும். எனவே இங்கு கட்டிடம் கட்டக்கூடாது என்று 2010ம் ஆண்டு  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதமும் இப்பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு அனுமதியின்றி இங்கு வணிக வளாகத்துடன் கூடிய மகளிர் தொழில் மையத்திற்கு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. இதுகுறித்து ரேணு  ராஜிடம் ஏராளம் புகார்கள் வந்தன. இதையடுத்து பணிகளை நிறுத்தி வைக்க அவர் உத்தரவிட்டார். இருப்பினும் கட்டிட பணிகள் ெதாடர்ந்து நடந்து வந்தன. இதையடுத்து 2 நட்களுக்கு முன் நேரடியாக சம்பவ இடம் சென்று  கட்டிட பணிகளை நிறுத்தி வைக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு சப் கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்த மூணாறு தாசில்தார் உட்பட அதிகாரிகள் அங்கு விரைந்தனர். இது குறித்து அறிந்த தேவிகுளம் மார்க்சிஸ்ட்  எம்எல்ஏ ராஜேந்திரன் தலைமையில் கட்சியினர் விரைந்து சென்று அதிகாரிகளை தடுத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாரும் வரவழைக்கப்பட்டனர். அப்போது எம்எல்ஏ ராஜேந்திரன் சப் கலெக்டர்  ரேணுராஜை கடுமையான வார்த்தைகளால் திட்டினார்.

அவள் அறிவில்லாதவள், வெறும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிதான். கலெக்டர் ஆகவேண்டும் என்பதற்காக ஐஏஎஸ் படித்த அந்த பெண்ணிற்கு நாட்டு நடப்பு எதுவும் தெரியாது. ஐஏஎஸ் படித்தால் எல்லாம் தெரியும் என்று அந்த பெண்  கருதுகிறாள். கட்டிட சட்டம் பஞ்சாயத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாகும். அதில் தலையிட அவளுக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த பஞ்சாயத்து கட்டும் கட்டிடத்திற்கு தடை விதித்தால் நஷ்ட ஈடு கோரி நான் அவள் மீது  வழக்கு தொடர்வேன். இவ்வாறு அவர் கூறினார்.ஐஏஎஸ் அதிகாரியை அவள் இவள் என்று ஒருமையில் மார்க்சிஸ்ட எம்எல்ஏ திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை உள்ளூர் தொலைக்காட்சி படம் பிடித்து  ஒளிபரப்பியது.

ராஜேந்திரன் எம்எல்ஏவின் செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனம் கிளம்பியுள்ளது. இதற்கிடையே மார்க்சிஸ்ட் எம்எல்ஏ நடவடிக்கைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை அணுக உள்ளதாக ரேணுராஜ் கூறியுள்ளார்.தடையை மீறி கட்டிட பணியை தொடர்ந்த பஞ்சாயத்து செயலாளருக்கு எதிராக இன்று உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்போதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தன்னை ஒருமையில் திட்டிய எம்எல்ஏவுக்கு எதிராக  கேரள வருவாய் துறை செயலாளரிடம் புகார் செய்யவும் தீர்மானித்துள்ளார். இதற்கிடையே எம்எல்ஏ ராஜேந்திரன் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அவரிடம் விளக்கம் கேட்க மார்க்சிஸ்ட் கட்சி  தீரமானித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • MummifiedFoal

  42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்த குதிரையின் உடலில் உறைந்த ரத்தம்..: ரஷ்ய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

 • SriLankaHomage

  இலங்கை தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு உலகச் சமூகங்கள் அஞ்சலி: பிரான்சின் ஈபிள் டவரில் விளக்குகள் அணைப்பு!

 • selphiGorilla

  கொரில்லாக்களையும் விட்டு வைக்காத செல்ஃபி மோகம் : குஷியான போஸ்கள்

 • QingdaoNavalParade

  சீனாவில் நடைபெறவுள்ள பிரம்மாண்ட கப்பல் அணிவகுப்பை ஒட்டி துறைமுகம் வந்தடையும் பல்வேறு நாடுகளின் போர்க்கப்பல்கள்!

 • CaucaLandslide

  கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி..: மீட்பு பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்