SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

21 தொகுதிக்கான எம்எல்ஏ தேர்தலை நடத்தாமல் இருக்க 2 ஐடியாக்களை தேர்தல் ஆணையம் வைத்திருக்கிறதாம்: wiki யானந்தா

2019-02-11@ 00:54:59

‘‘கடல் அலைகளை பார்க்கும்போது மனதிலும் அரசியல் அலை அடிக்க தொடங்கி இருக்கு விக்கி... அது ஒரு பக்கம் இருக்கட்டும் இலைகட்சியில என்ன நடக்குது...’’  என்றார் பீட்டர் மாமா.‘‘இலை கட்சியில விருப்ப மனு வாங்குவதற்கான காலக்கெடுவை நீட்டிச்சு இருக்காங்களாம்... அதன் பின்னணி காரணத்தை விசாரித்தபோது ஜெயலலிதா  இருந்தபோது வந்த விருப்ப மனுவை விட அதிக எண்ணிக்கையில் வந்ததாக அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். குறைவான மனுக்களை சொன்னால் நம்ம  கட்சி தொண்டர்களே நம்மலை மதிக்க மாட்டாங்கனு மேலிடத்தில் உள்ளவர்கள் நினைத்தார்களாம்.. அதனால்தான் இந்த நீட்டிப்பு என்று இலை தலைமையகத்தில்  பேசிக் கொண்டனர்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘வாரிசுகளுக்கு சீட் இல்லைனு சொன்னாங்க...’’ என்றார் பீட்டர்.
‘‘நேற்று கடைசி நாள்னு நினைச்சு விருப்ப மனு தாக்கல் செய்தவர்களில் பலரும் வாரிசுகள்தான்னு பேசிக்கிட்டாங்க... குறிப்பாக மைக் அமைச்சர் மகனும் விருப்ப மனு  தாக்கல் செய்துட்டாராம்.. அது குறித்து கேட்டதற்கு ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே எனக்கு அமைச்சர் என் மகனுக்கு எம்பி பதவி கொடுத்துட்டாங்க... அதனால  என் மகன் விண்ணப்பிப்பது வாரிசுகள் கீழே வராதுன்னு மைக் அமைச்சரு  சொல்லி சமாளிக்கிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘பேச தெரியாம பேசி மாட்டிக் கிறது என்றால் எப்படி,’’ என்றார் பீட்டர் மாமா.‘‘புது கட்சி ெதாடங்கி இருக்கிற நடிகரு... பிரதமர் வந்தால் ஏன் வந்தீர்கள் என்று கேட்க உரிமை இல்லை. வராவிட்டால் ஏன் வரவில்லை என்று கேட்கலாம்னு புது  ெமாழியை சொல்லி இருக்காரு... அவருக்கு எதிர்முகாமுல  இருக்கிறவங்க, கஜா புயல் பாதிப்புக்கு வராமல் இப்போது ஏன் வந்தீங்கனுதான் நாங்க கேட்கிறோம்...  மற்ற தமிழர்களை புறக்கணித்து தமிழகத்தில் அரசியல் செய்வது தர்மமா என்றுதான் கேட்கிறோம்... அது புரியாமல் அவரு பதில் அளிக்கிறாரு என்று பம்பரம்  சுழன்றவாரே கேட்கிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘திருப்பூர்ல மோடியின் பேச்சை கவனிச்சீங்களா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘அவரின் பேச்சு தொடக்கம் முதல் முடிவு வரை ஓட்டு அரசியலை குறிவைத்து அவர் பேசுவதை மட்டுமே உணர முடிந்தது... அதாவது காங்கிரஸ் கட்சியை குறி வைத்து பல  விஷயங்களை பேசினாலும் அதில் ஹைலைட்டான விஷயம் காமராஜரை பற்றி பேசியதுதானாம்... இதை கூட மாநில தலைமைதான் காமராஜர் பற்றிய  விஷயங்களை தொகுத்து டெல்லிக்கு அனுப்பியதாம்... அடுத்ததாக 10 சதவீத இடஒதுக்கீடு சரி என்று சமாளிக்கும் வகையில் தலித் மக்கள் மீது தங்களுக்குதான்  உண்மையான அக்கறை இருக்கிறது என்று பேசியிருக்கிறார்... ஊழல்.. ஊழல்னு மூச்சுக்கு முப்பது தடவையாவது பேசியிருப்பாரு... ஆனால் மாநில ஊழல் பற்றி ஒரு  வார்த்தை கூட பேசலையாம்... அங்கிருந்த பூ கட்சி தொண்டர்களிடம் விசாரித்தால்  இது  நாடாளுமன்ற மக்களவை தேர்தல்.. தேசிய கட்சியை தான் விமர்சிக்க  முடியும்... அதனால்தான் காங்கிரஸ் கட்சியை  விமர்சித்தார் என்று சொல்லி சமாளித்தனர்...’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தம்பிக்கு தடைபோட்ட விஷயம் தெரியுமா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘தன் காலை மிதித்ததால் நான் அவர்கள் காலை மிதிப்பேன்... தாமரை என்னை சீண்டியதால், அவர்களை நான் சீண்டி பார்க்கிறேன்னு சொல்லி பல மாதங்களாக கடும்  விமர்சனம் செய்தார்... தமிழ்நாட்டை சேர்ந்தவரு மக்களவையில் பெரிய பொறுப்பில் இருந்தாலும் அவருக்கு திருப்பூர் விழாவில் அனுமதி இல்லையாம்... இதனால  வெம்பி கிடக்கிறாரு... அது மட்டுமில்ல விழாவில் பேசவிட்டால் அவரு தாமரை தலைவரை வறுத்தெடுத்துடுவாரு... ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தி விடுவாருனு இலை  தரப்புல அவரை சமாதானம் செய்துட்டாங்களாம்... உங்களுக்கும் நீங்க காட்டுகிற ஒருவருக்கும் எம்பி சீட் தர்றோம்... அவங்களை ஜெயிக்க வைக்க வேண்டியது  உங்க பொறுப்பு... பணத்தை பற்றி கவலை வேண்டாம்னு விவிஐபிக்கள் வாக்குறுதி கொடுத்தாங்களாம்... அதனாலதான் தம்பி அமைதியாகிட்டாராம்...’’ என்றார்  விக்கியானந்தா..

‘‘இடைத்தேர்தல், மக்களவை ேதர்தலை ஒன்றாக நடத்துவதை தவிர்க்க இரண்டு விதமான திட்டங்களை கமிஷன் வைத்திருப்பதாக சொல்றாங்களே  உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ம் நானும் கேள்விப்பட்டேன்... முதல் விஷயத்தை சொல்கிறேன்... 18 தொகுதிகளுக்கும் மேல்முறையீடு செய்யவில்லை. இதனால் அந்த தொகுதியில்  இடைத்தேர்தலை நடத்தலாம்... ஆனால் ஆணையத்தின் கணக்கு என்ன சொல்லுது என்றால், என்றைக்கு தகுதி இழப்பு வழக்கில் மேல்முறையீடு செய்ய முடியாதோ  அன்றில் இருந்துதான் ஆறுமாதம் கணக்கு... அதனால நாடாளுமன்ற தேர்தலோடு  சேர்த்து நடத்த முடியாது என்று சொல்லவும் திட்டம் இருக்காம்... இரண்டாவது  விஷயம், வாக்கு பதிவு இயந்திரத்தில் மக்களவை தேர்தல் இயந்திரம் ஒரு பக்கமும், 21 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலுக்கு மற்றொரு புறமும் ஓட்டு பதிவு  இயந்திரம் வைக்கணும்... இதனால ஒரே நபர் இடைத்தேர்தல் நடக்கும் தொகுதியில் 2 ஓட்டு போடனும்... ஒன்று எம்எல்ஏவுக்கு மற்றொன்று எம்பி தேர்தலுக்கு  போடணும்... இதற்காக தனியாக அதிகாரிகளை நியமிக்கனும்... இந்த விஷயங்கள் மக்களிடம் குழப்பதை ஏற்படுத்தும்... சிலர் ஒரு இயந்திரத்தில் ஓட்டு  போட்டுவிட்டு மற்றொரு ஓட்டை போடாமல் போகவும் வாய்ப்பு இருக்கு... ஒவ்வொரு வாக்காளரிடமும் நீங்கள் ரெண்டு ஓட்டு போடனும்னு சொல்ல முடியாது...  இயந்திரம் வைக்கும் வசதியும் சில பள்ளிகளில் இல்லை... அப்புறம் வாக்கு பதிவு முடிந்த பிறகு எம்பி தேர்தல் வாக்கு பதிவு இயந்திரங்கள், எம்எல்ஏ தேர்தல் வாக்கு  பதிவு இயந்திரங்களை தனித்தனியாக வைத்து பராமரிப்பது சிக்கல்... ஒரு இயந்திரம் மாறி வேறு பக்கம் போனாலும் சிக்கல்... வாக்கு சீட்டு முறையில்  இடைத்தேர்தலை அந்த பகுதியில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வந்து இருக்காம்... ஆனால் அது தப்பான முன் உதாரணம் ஆகிடும்... இப்படிதான்  தமிழகத்தில் இருந்து வரும் கோரிக்கைக்கு பதில் சொல்லணும்னு தாமரை தரப்பு ஆணையத்துக்கு வகுப்பு எடுத்து இருப்பதாக டெல்லி தகவல்கள் வெளியாகி இருக்கு...’’  என்றார் விக்கியானந்தா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்