SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கஜா புயலால் சேதமடைந்த படகுகளை சீரமைக்க ரூ.6.83 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவு

2019-02-11@ 00:46:28

சென்னை: கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்கவும், மீன்பிடி வலைகள் வாங்க மீனவர்களுக்கு  ரூ.6.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த நவம்பர் 16ம் தேதி ஏற்பட்ட கஜா  புயலால் தமிழகத்தில் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உட்பட 8 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்பித்துள்ளனர். அந்த அறிக்ைகயின்  பேரில், 195 படகுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. 1429 படகுகள் ஒரு பகுதி மட்டுமே சேதமடைந்துள்ளது.மேலும், 932 நாட்டு படகுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. 3106 படகுகள் ஒரு பகுதி மட்டுமே சேதமாகியுள்ளது.  10648 மீன் பிடி வலைகள்,2100 மீன் பண்ணைகள் சேதமடைந்துள்ளது. இந்த சேதத்தை சரி செய்ய ரூ.51 கோடி நிதி தேவை என்று அறிக்கை அனுப்பியுள்ளது. இந்த நிலையில், கஜா புயலால், மீனவர்கள் படகுகளை இழந்து,  இரண்டு மாதமாக தவித்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தமிழக அரசு நிவாரணமாக, முழுவதும் சேதமடைந்த வலைகளுடன் கூடிய கட்டுமரங்களுக்கு ரூ.42 ஆயிரமும், பகுதி சேதமடைந்த வலைகளுடன் கூடிய  கட்டுமரங்களுக்கு ரூ.20 ஆயிரம் வரையும், முழுவதும் சேதமடைந்த எப்.ஆர்.பி. படகுகள் மற்றும் வலைகளுக்கு ரூ.85 ஆயிரமும், பகுதி சேதமடைந்த எப்.ஆர்.பி. படகுகள் மற்றும் வலைகளுக்கு ரூ.30 ஆயிரம் வரையும், முழுவதும்  சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.5 லட்சம், பகுதி சேதமடைந்த விசைப்படகுகளுக்கு ரூ.3 லட்சம் வரையும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் கஜா புயலால் சேதமடைந்த மீன்பிடி படகுகளை சீரமைக்கவும், மீன்பிடி வலைகள் வாங்கவும் ரூ.6.83 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, கடலூர்,  திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சேதமடைந்த  ஆயிரத்து 51 படகுகளுக்கு 683 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  சேதமடைந்த பைபர் படகுகளுக்கு ரூ.5.70 கோடியும்,  பாதி சேதமடைந்த  படகுகளுக்கு ரூ.1.13 ேகாடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கஜா புயலால் சேதமடைந்த பைபர் படகுகளுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.85 ஆயிரத்தையும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என  முதலமைச்சர் பழனிசாமி கடந்த 4ம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்