SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேருக்கு குண்டாஸ்

2019-02-10@ 02:04:40

சென்னை: கொலை, கார் திருட்டு, செயின் பறிப்பு போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 4 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். ராயப்பேட்டை, செல்லம்மாள் கார்டன் முதல் ெதருவை சேர்ந்த விமல் (எ) சைக்கோ விமல் (எ) விமலநாதன் (28). இவர் மீது ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகள் உள்ளன. ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர். ேமலும் காசிமேடு, பல்லவன் நகர் 2வது தெருவை சேர்ந்த மணிவண்ணன் (எ) மணிகண்டன் (26). வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு மற்றும் இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. வளசரவாக்கம், கடம்பாடியம்மன் கோயில் முதல் தெருவை சேர்ந்த யோகநாதன் (37). திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவை சேர்ந்தவர் அப்துல் ஹமீது (47). இருவர் மீதும் கோயம்பேடு காவல் நிலையத்தில் கார் திருட்டு வழக்குகள் உள்ளன.இந்த குற்றவாளிகள் 4 பேரும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் அவர்களை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2019

    24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • vote

    3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

  • hailstrom

    தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

  • bookday

    இன்று உலக புத்தக தினம் : புத்தகங்களை நேசிப்போம், வாசிப்போம்!

  • ukraine

    உக்ரைனில் டிவி சிரியலில் அதிபராக நடித்த நகைச்சுவை நடிகர் ஜெலன்ஸ்கி நிஜத்திலும் அதிபரானார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்