SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சங்க தலைவர் வாரிசை வைத்து புது இயக்கத்தை மாங்கனி மாவட்டத்தில் தொடங்கியது குறித்து சொல்கிறார் wiki யானந்தா ‘

2019-02-08@ 05:06:20

‘என்ன பீட்டர் மாம்பழத்தையே பார்த்துட்டு இருக்க...’’ என்று பீட்டரை கேட்டார் விக்கியானந்தா.‘‘மாம்பழம் இனிக்குமா... புளிக்குமா என்று கேட்க வர்றே... கூட்டி கழிச்சுபாரு எல்லாம் சரியா வரும்... யாரு எந்த பக்கம் பேசுறாரு என்ற தகவல் எல்லாம்  வந்துட்டு இருக்கு... மாம்பழத்துக்கு ரொம்ப நெருக்கமான சில ெதாழிலதிபர்கள் பிசினஸ் என்ற பெயரில் பேச்சுவார்த்தை நடத்தறாங்க... அவங்க இரண்டு  கூட்டணி கட்சிக்கும் ரொம்ப நம்பிக்கையானவங்களை வைச்சு மூவ் பண்றாங்களாம்... இதுல சிக்கலே இரண்டு கட்சிக்கும் வெற்றி வாய்ப்புள்ள ெதாகுதிகளை  இருவரும் கேட்பதுதான்... அடுத்தது ‘சி’ விவகாரம்... ஒரு தொகுதிக்கு எவ்வளவு நீங்க தருவீங்கனு கேட்டாங்களாம்... அதுவும் சிக்கல் நீடிக்க காரணம்னு  சொல்றாங்க... இருந்தாலும் ஒற்றை இலக்கத்தில தான் சீட் கிடைக்கும்னு ெசால்றாங்க... மாம்பழம் ஒருவருக்கு இனித்தால் மற்றொருவருக்கு புளிக்க தானே  செய்யும்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘உள்வாடகைனு சொல்றாங்களே அப்படி என்றால் என்ன தெரியுமா...’’ என்றார் பீட்டர் மாமா.‘இந்து சமய அறநிலையத்துறையில் கோயில்களுக்கு தானமாக வழங்கப்பட்ட வீடுகள், கட்டிடங்கள், வணிக வளாகங்கள் ஆகிய அசையா சொத்துக்களை  குத்தகை அல்லது வாடகை அடிப்படையில் அனுபவித்து வருபவர்கள் அக்கட்டிடங்களில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தக்கூடாது. அப்படியே கட்டிடங்களில்  மாற்றம் செய்ய வேண்டும் என்றால் துறையின் முறையான அனுமதியை பெற வேண்டும்.
ஆனால், வேலூர் மாவட்டத்தில் கோயிலுக்கு சொந்தமான மானிய பகுதிகளில் தரை வாடகையில் உள்ளவர்கள் அதிகாரிகளின் துணையுடன் மாடி வீடுகளை கட்டி  அதை வாடகை விட்டு மாதந்தோறும் பல்லாயிரக்கணக்கில் வருவாய் பார்த்து வருகின்றனர். இத்தகைய அத்துமீறலை தடுக்க விரும்பும் அதிகாரிகளை, உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் முடக்கி விடுகிறார்களாம்... அதிகாரிகளும் தங்களுக்கு எக்ஸ்டிராவாக  வருவதை ஏன் தடுக்க வேண்டும்னு கண்டுக்கிறது இல்லையாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘சங்க தலைவர் வாரிசை வச்சு கட்சியை பலவீனமாக்கும் முயற்சி நடக்குதாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘முக்கிய கட்சிகள் கூட்டணி பணியை தொடங்கிட்டாங்க... அதே நேரத்தில் ஒவ்வொரு கட்சியிலும் அதிருப்தி கோஷ்டிகளும் வரிந்து கட்டி தனிஆவர்த்தனம்  நடத்த தயாராக தொடங்கிட்டாங்களாம். இதில் மாம்பழ கட்சியிலுள்ள அதிருப்தி கோஷ்டி, புதிதாக ஒரு சங்கத்தை துவக்குவதற்கான ரகசிய கூட்டத்தை நடத்தி  முடிச்சிருக்காம். அந்த கட்சியிலும் அது சார்ந்த ஜாதி சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருந்து, சமீபத்தில் இறந்து ேபான ஒருவரின் மகனை  முன்னிலைப்படுத்தி இந்த சங்கத்தை தொடங்கப்போறாங்களாம். இது தொடர்பான ரகசிய கூட்டம், மாங்கனி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்திருக்காம். மாம்பழம்,  இலையோடு ஒட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கு.

இலை கட்சி தான், மறைந்த தலைவரை குண்டர் சட்டம் வரைக்கும் போட்டு துன்புறுத்தியது. அது மட்டுமல்லாமல் 120 பேருக்கு மேல் குண்டர் சட்டம்  பாய்ந்திருக்கு. அப்படி இருக்கும் போது மாம்பழம், இலையோடு ஒட்டுவது அபத்தமானது. எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துதான், புதிய சங்கத்ைத  உருவாக்குகிறோம் என்று சீறினார்களாம் ரகசிய கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘எதுல தான் கூட்டணி வைக்கணும் என்ற விவஸ்தையே இல்லாம போச்சு...’’ என்று சலித்து கொண்டார் பீட்டர் மாமா.‘‘மிச்ச கதையை நான் ெசால்றேன் கேளு... வந்தவாசி டவுன் ஆரணி சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபானக்கடைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு  தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த கடையால் அதிகளவில் பாதிக்கப்படுவது காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த பெண்களே. போராட்டத்தின்  போது அங்கு வரும் வருவாய்த்துறை அதிகாரிகள் கடையை இடமாற்றம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுப்பதாக பலமுறை உறுதி அளித்தும், அதற்கான  நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க போலீசார் புதிய திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர். காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த மகளிர் குழுவினர்  வந்தவாசி நகராட்சியில் மாதம் ₹7 ஆயிரம் சம்பளத்துக்கு தற்காலிக துப்புரவாளர்களாக பணிபுரிந்து வருகிறார்களாம். இதனால், நகராட்சி நிர்வாகத்திடம்  போலீசார் டாஸ்மாக் சார்பில் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அதன்படி, காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த தற்காலிக துப்புரவு பணியாளர்களிடம், ‘இனி  டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட மாட்டோம்’ என்று நகராட்சி நிர்வாகம் எழுதி வாங்கி கொண்டதாம்... தற்போது டாஸ்மாக் கடையால் ஏற்படும்  பாதிப்புகளை ெவளியே சொல்ல முடியாமல் அமைதியாகிவிட்டனர். சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட போலீசாரின் அறிவுப்பூர்வமான சிந்தனையை மற்ற  போலீஸ் நிலையங்களில் பணிபுரிபவர்கள் பாராட்ட தொடங்கிவிட்டனர். ₹7 ஆயிரம் சம்பளம் பறி போய்விடும் என்று பெண்களை மிரட்டி டாஸ்மாக் மதுபான  விற்பனைக்கு ஆதரவாக எழுதி வாங்கிய விவகாரம்தான் வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் தற்போதைய பரபரப்பான பேச்சாக உள்ளது...’’ என்றார்  விக்கியானந்தா.‘‘மற்றவர்களின் வயிற்றில் அடித்தும் மிரட்டியும் தான் அரசு டாஸ்மாக் மூலம் பணம் சம்பாதித்து அரசை நிர்வாகம் செய்ய வேண்டுமா என்று மனதிற்குள்  புழுங்கும், இந்த பலவீனமான பெண்களின் குரல் யாருக்கு கேட்குமோ தெரியவில்லை...’’ என்று மன வருத்தத்துடன் சொன்னார் பீட்டர் மாமா.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • colorado

  கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

 • trainchina

  சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

 • 24-05-2019

  24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்