SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயிலில் அபாய சங்கிலியை இழுத்தவர்களை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்?

2019-02-07@ 15:25:10

ரயில் பயணத்தின்போது அவசர நேரங்களில் ரயில்களை நிறுத்த பைலட்(டிரைவர்), கார்டுகளை தேடிச் சென்று தகவல் சொல்ல முடியாது. எனவே அபாய சங்கிலி பயன்படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் கோச்சின் இருபக்கமும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. ஆனால் தவறான பயன்பாடுகளே அதிகமாக இருந்தது. இதனால் பயண நேரம் அதிகரித்ததுடன், மற்ற ரயில்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. இதனால் இவற்றின் எண்ணிக்கை வெகுவாய் குறைக்கப்பட்டு தற்போது பெட்டியின் ஒரு பக்கம் மட்டுமே வைக்கப்படுகிறது. இது எப்படி செயல்படுகிறது என்று முதலில் பார்ப்போம். ரயிலின் சக்கரத்தின் அருகே பிரேக்பைப்பில் இந்த சங்கிலி இணைப்பு பிணைக்கப்பட்டிருக்கும்.

சங்கிலியை இழுத்ததும் பிரேக் குழாயில் இருந்து காற்று அழுத்தத்துடன் வெளியேறும். காற்று அழுத்தம் குறைவைதால் ரயிலின் வேகம் குறையும். இதைப்பார்த்ததும் பைலட் ரயிலை நிறுத்துவார். அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கும் போது இழுத்தால் ரயில் நிற்க 3 முதல் 4 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். எந்த கோச்சில் இருந்து சங்கிலி இழுக்கப்பட்டது என்று எப்படி தெரிந்து கொள்கிறார்கள்.? ஒவ்வொரு பெட்டியிலும் எமர்ஜென்சி கண்ணாடி இருக்கும். சங்கிலி இழுபட்டதும் அதில் உள்ள விளக்கு எரிவதுடன், ஒலியும் எழும்பும். இதை வைத்து ரயில்வே பாதுகாப்பு போலீசார், கார்டு உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு வந்து விசாரணை நடத்தி விபரங்களை தெரிந்து கொள்வர்.

இதை எந்தமாதிரியான சூழ்நிலையில் இழுக்கலாம்.? பயணி யாராவது தவறிவிழுந்தால், ஸ்டேஷனில் உடன் வந்தவர்கள் ரயிலில் ஏற பரிதவிக்கும் போது, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஏற உரிய நேரம் தராமல் ரயில் கிளம்ப முற்படும் போது, திருட்டு, அவசரகால சிகிச்சை தேவைப்படும் நேரங்கள் போன்ற ஏற்கத்தக்க நேரங்களில் இவற்றை இழுக்கலாம். தேவையில்லாமல் இவற்றை இழுத்து பயணத்திற்கு இடையூறு செய்தால் அதிகபட்சம் ஒருவருட சிறை மற்றும் ரூ.ஆயிரம் அபராதம் செலுத்த நேரிடும். இழுக்கப்பட்ட சங்கிலியை மறுபடியும் ரீசெட் செய்து பிறகு ரயில் மீண்டும் கிளம்பும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-08-2019

  24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • FloatingNuclearPlant23

  ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

 • robo

  பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

 • france_modi11112

  பிரதமர் மோடி பிரான்ஸ் நாட்டிற்கு பயணம் : பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோனை சந்தித்து பேசினார்

 • cleb_11_kri

  கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டின

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்