SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எம்பியை விட எம்எல்ஏ தேர்தலுக்கு ஆர்வம் காட்டும் இலைகட்சி நிர்வாகிகள் குறித்து சொல்கிறார் wiki யானந்தா

2019-02-07@ 02:21:25

‘‘என்ன குக்கர் ஆட்களை களையெடுப்பதை படிக்கிறீங்களா...’’ என்று பீட்டரை கலாய்த்தார் விக்கியானந்தா.
‘‘இலை தரப்பு தங்கள் பவரை வைத்து குக்கரின் ஸ்லீப்பர் செல்களை ஏறக்குறைய அடையாளம் கண்டுள்ளனர்... இவர்கள் தேர்தல் நேரத்தில் கரன்சியை  நம்மிடம் வாங்கிவிட்டு குக்கரிடம் காட்டி கொடுப்பவர்கள்... கரன்சியும் வாக்காளருக்கு போகாது என்ற தகவல் கிடைத்துள்ளதாம்... மாங்கனி மாவட்டத்துல  இருக்கிற அனைத்து தொகுதியிலும் இலை ஜெயிச்சே ஆகணும்... இல்லை என்றால் என்னை யாரும் மதிக்க மாட்டாங்கனு நினைக்கிறாராம்... அதேபோல  தேனியிலும் சில பவர்புல் அமைச்சர்களின் மாவட்டங்களிலும் நீக்கம், புது பதவி என்று இலை கட்சி தரப்புல வேலை துவங்கி இருக்காங்க...’’ என்றார்  விக்கியானந்தா.

‘‘வாரிசு அரசியலை இலை தரப்பு எப்டி சமாளிக்கிறாங்களாம்...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘வாரிசு அரசியலை ஆதரிக்காத கட்சியில இனி வாரிசு அரசியலை  தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்சியில் தான் இல்லாவிட்டாலும் தன் குடும்பத்தின் ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதற்காகவே வாரிசுகளை  போட்டியிட வற்புறுத்துகிறார்கள்... அதுபோன்று நாடாளுமன்ற சீட் கேட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு எம்எல்ஏ தேர்தலில் சீட் தருவதாக உறுதியளிக்கப்பட்டு  இருக்காம்... நீங்க யாரை கை காட்டுறீங்களோ அவங்களை ஜெயிக்க வைக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது... அப்படி இருந்தால் சீட் என்று இலை கட்சி  கண்டிஷன் போட்டுள்ளதாம்... இதனால தனக்கு வேண்டியவங்களுக்கு சப்போர்ட் செய்த சிலர் தன் மகன், மனைவி, மருமகளை நிறுத்தலாமானு யோசிச்சிட்டு  வர்றாங்க...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எம்பி தேர்தலுக்கு விருப்ப மனுவை அறிவிச்ச இலை கட்சி காலியாக உள்ள சட்டமன்ற ெதாகுதிகளுக்கு இன்னும் ஏன் அறிவிக்கல...’’ என்றார் பீட்டர்  மாமா.‘‘இப்போதுதான் உருப்படியா ஒரு கேள்வியை கேட்டு இருக்க பீட்டர்... எம்பி தேர்தலை விட சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலை தான் மிகவும்  முக்கியமானதாக இலை தரப்பு நினைக்குது... அதற்கான பின்னணி வேலைகளை எல்லாம் இலை தரப்பு செய்துட்டு வருது... ஆள் பலம், பண பலம், சொந்த  செல்வாக்கு, ஜாதி பலம் உள்ளிட்டவற்றை சேகரித்து வைத்து ஆட்களை தேர்வு செய்து வைத்து இருக்காங்களாம்... நாடாளுமன்ற பொதுத்தேர்தலோடு  இடைத்தேர்தலுக்கும் அறிவிப்பு வெளியாகும்... அப்போது விருப்ப மனுவை வாங்குவதுபோல வாங்கி, ஏற்கனவே தேர்வு பட்டியலில் உள்ளவர்களை அறிவிக்க  முடிவு செய்து இருக்காம்... அதனால தான் இடைத்தேர்தலுக்கான விருப்ப மனுவை அறிவிக்கலையாம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தமிழகத்தின் இரண்டாவது விவிஐபி மகனுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்காமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.‘‘உண்மைதான்... அதாவது, 3  முதல்வர்களை தமிழகத்துக்கு கொடுத்த மாவட்டம் தேனி. இப்போது அந்த பெயருக்கு டமால் ஆனதாக பேச்சு ஓடுது... விவிஐபியின் தீவிர விசுவாசியான ‘பன்’  பெயரை கொண்டவர், தொகுதி பக்கம் வராததால எங்க பார்த்தாலும் அவரால கட்சிக்கும் கெட்டபெயர்னு தொண்டர்கள் புலம்புறாங்க... அதனால அடுத்து வர்ற  தேர்தல்ல தேனி தொகுதிய கைப்பற்ற பலமான போட்டி எதிர்தரப்புல இருக்கும்.... அதனால விவிஐபியோட மகனுக்கு சீட் குடுக்கணும்னு அவங்க ஆதரவாளர்கள்  கேட்கிறாங்க... இன்னொரு விவிஐபியின் தீவிர ஆதரவாளரான ‘ஜக்’ தரப்புல வேற மேட்டர் ஓடுது... அவரது மகனும் தேனி மாவட்ட மாணவரணி  செயலாளருக்கு சீட்டு கொடுக்கணும்... தேர்தலில் கட்சியினருக்கு செலவு செய்ய இவங்கள விட்டா வேற ஆளில்லை... சமுதாயரீதியாகவும் ஓட்டு வாங்குவாரு  அப்படின்னு சொல்றாங்களாம்... இதனால சீட்டு விவிஐபி மகனுக்கா? அல்லது இன்னொரு விவிஐபியின் ஆதரவாளருக்கானு பேச்சு ஓடிட்டு இருக்கு...’’ என்றார்  விக்கியானந்தா.

‘‘வேற என்ன- விஷயம் இருக்கு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘குமரி அரசு ரப்பர் கழகத்துக்குட்பட்ட கீரிப்பாறை கோட்டம் பரளியாறு பிரிவில் உள்ள  அரசு ரப்பர் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் ஒட்டு மொத்தமாக அரசு ரப்பர் கழக அதிகாரிகளுக்கும், வனத்துறையினருக்கும் பெரும் சிக்கலை  உருவாக்கி இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடையில் தீ தடுப்பு வேலி அமைப்பது வழக்கம். பல இடங்களில் இவ்வாறு பயர் லைன் அமைத்து உள்ளதாக  அரசு ரப்பர் கழக அதிகாரிகள் சென்னையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். ஆனால் அரசு ரப்பர் தோட்டத்தில் எங்கேயும் பயர் லைன்  அமைத்ததற்கான  சுவடுகள் கூட இல்லையாம். இந்த நிலையில் தான் பரளியாறு பிரிவு கூப் எண் 19 சி பிரிவில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட மரங்கள் எரிந்து நாசமாகி உள்ளன.

இதனால் ஏற்படும் சிக்கலை தீர்க்க அவசர, அவசரமாக கீரிப்பாறை காவல் நிலையத்தில் அரசு ரப்பர் கழக அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். வனத்துறைக்கு  சொந்தமான இடத்தில் ஏற்பட்ட தீ  தான், பரவி அரசு ரப்பர் தோட்டத்துக்குள் வந்து விட்டது என புகார் அளித்து, வனத்துறையும் தீ தடுப்பு வேலி அமைக்க  வில்லை என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார்களாம். இதனால் இந்த தீ விபத்து சம்பவம் வனத்துறைக்கும் சிக்கலை உருவாக்கி உள்ளது. வனத்துறை  அமைச்சரின் கவனத்துக்கு  பலமுறை தீ தடுப்பு வேலி அமைக்காமல் உள்ளது குறித்து புகார் தெரிவித்தும் அவர் கண்டு கொள்ளாததால், அரசுக்கு சொந்தமான  ரப்பர் மரங்கள் எரிந்து நாசமாகி பல லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றியெல்லாம் விசாரிக்க வனத்துறை அமைச்சருக்கு நேரம் இல்லையா? என்று  தொழிலாளர்கள் கூறுகிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா. n


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 23-05-2019

  23-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

 • virat_koh11

  உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

 • libya_sandai11

  தொடரும் உக்கிரமான தாக்குதல்கள் : லிபியாவில் ஆயுதக் குழுவினர் , அரசுப் படைகளுடன் கடும் துப்பாக்கிச் சண்டை

 • thuppaki-12jk

  13 பேரை காவு வாங்கிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : ஓராண்டு நினைவலைகளை ஏந்தும் தமிழகம்

 • hurricane_12

  அமெரிக்காவை கலங்கடித்த தொடர் சூறாவளித் தாக்குதல் : மழை,வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்