SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பை ஏற்று தமிழக அரசு உரிய நடவடிக்கை

2013-04-17@ 01:31:52

சட்டப்பேரவையில் நேற்று, “தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து நச்சு வாயு வெளியேறியதால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்படுவது குறித்து’’ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சவுந்தரராஜன், கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதற்கு பதில் அளித்து சுற்றுச்சூழல் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:தூத்துக்குடி சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் 1997ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தற்போது, தினசரி 1200 டன் காப்பர் ஆனோடு, 875 டன் காப்பர் கேதோடு, 800 டன் பாஸ்பாரிக் அமிலம் மற்றும் 4200 டன் கந்தக அமிலம் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு உற்பத்தியாகும் 4,080 கிலோ லிட்டர் செய்முறை கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. புகைபோக்கி வாயுவின் தரம் சுற்றுச்சூழல் காற்றின் தரம் ஆகியவற்றை கண்காணிக்கும் கருவிகளும் உள்ளது.இதற்கிடையில், கடந்த மாதம் 23ம் தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி கீழசண்முகாபுரம், புதுகாலனி மக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் தொண்டை அடைப்பு பாதிப்புகள் இருப்பதாக, தூத்துக்குடி மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகத்துக்கு புகார் வந்தது. உடனடியாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஆய்வு செய்தனர். அதில், புகைபோக்கியில் இருந்து கந்தக டை ஆக்ஸைடின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தர அளவைவிட அதிகமாக வெளியேறுவது தெரியவந்தது.

இதையடுத்து, ஸ்டெர்லைட் தொழிற்சாலையின் தாமிர உருக்காலை பிரிவை மூடவும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட்டதால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் தொழிற்சாலை, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தாக்கல் செய்தது. இந்த வழக்கு கடந்த 12ம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது இடைக்கால உத்தரவில், இரண்டு பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பதற்கும், இந்த குழுவில் ஒரு தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் இடம் பெற வேண்டும். இவர்களுக்கு உதவியாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் இருந்து ஒருவரும், ஸ்டெர்லைட் ஆலை சார்பாக ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.இந்த நிபுணர் குழுவில் இடம் பெறும் பெயர்கள் நாளை வெளியிடப்படும். இந்த குழு ஆலையை ஆய்வு செய்யும்போது ஆலையை இயக்கி காட்ட வேண்டும். இந்த ஆய்வுக்கு பின் நிபுணர் குழு அறிக்கையை வரும் 29ம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யும். அதன்பிறகு தீர்ப்பு வழங்கப்படும். தேசிய பசுமை தீர்ப்பாயம் அளிக்கும் தீர்ப்பை ஏற்று தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் கூறினார்.

sms spy app read spy apps free
prescription coupon card viagra online coupon viagra online coupon

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-03-2017

    26-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • faRKENchicken4LEGS

    பிரேசிலில் நான்கு கால்கள் உடன் பிறந்த 'ஃபிராங்கன்-கோழி' : வினோதமான படங்கள்

  • peraumLTEMPLefestival

    ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பிரமோற்சவ திருவிழா : ஆதிகேசவப்பெருமாள் கண்ணாடி பல்லக்கில் வீதியுலா

  • 25-03-2017

    25-03-217 இன்றைய சிறப்பு படங்கள்

  • dogWIThoutPULSEresuced

    எரியும் அடுக்குமாடி கட்டிடத்தில் சிக்கி உயிர்க்கு போராடிய நாய் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்ட: நம்பமுடியாத படங்கள்