ரோந்து செல்லும் போலீசாருக்கு உரிய பயணப்படி வழங்க வேண்டும் : உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
2019-01-24@ 14:51:54

மதுரை : ரோந்து செல்லும் போலீசாருக்கு பயணப்படி வழங்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து காவல்நிலையங்களில் இருந்தும் ரோந்து பணிக்காக ஒரு தலைமை காவலர் அல்லது துணை அய்வாளர் தலைமையில் ரோந்து பணிக்காக படைகள் அமைக்கப்படுகின்றன. இவர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் இரண்டு சக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து செல்வார்கள். இவ்வாறு செல்லும் போலீசாருக்கு தமிழக அரசு முறையாக பெட்ரோல் அல்லது பயணப்படி அளிப்பதில்லை. இதனால் போலீசார் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குகின்றனர். மேலும் முறையாக ரோந்து பணிகள் மேற்கொள்ளாததால் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்கிறது.
இதுகுறித்து தாமாக முன்வந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆதிகேசவலு மற்றும் சசிதரன், தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் குறைய வேண்டும் என்றால் ரோந்து செல்லும் போலீசார் சரியாக செயல்பட வேண்டும் என்றும், காவல்துறையில் லஞ்சம் வாங்குவதை தவிர்க்க ரோந்து செல்லும் வாகனங்களுக்கு தேவையான பெட்ரோல் படியை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஆயிரத்து 500 ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பயணப்படியாக வழங்க வேண்டுமென கருதுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தமிழக அரசு பரிசீலனை செய்து இரண்டு மாதத்திற்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
குமரி-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை: ரயில்வே இடத்தில் இருந்த 62 வீடுகள் அகற்றம்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் காயம்
ஹெச்ஐவி பாதித்த குழந்தை சிகிச்சையில் அலட்சியம்? கோவை அரசு மருத்துவமனை மீது பெற்றோர் புகார்
சிவகாசியில் பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து 7 பேர் குழு ஆய்வு
செவல்பட்டியில் நூலக கட்டிடத்தில் இயங்கும் பால்வாடி : இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு
புதுகை அருகே மாத்தூரில் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு கம்பெனிகள் மூடல் : 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு
உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி