நடிகைகள் திருமணத்துக்கு செல்லும் மோடிக்கு சாமியார் இறுதிச்சடங்கில் பங்கேற்க நேரமில்லையா?: பரமேஸ்வரா
2019-01-24@ 14:22:52

பெங்களூரு: நடிகைகள் திருமணத்துக்கு செல்லும் மோடிக்கு சாமியார் இறுதிச்சடங்கில் பங்கேற்க நேரமில்லையா? என்று கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா கேள்வி எழுப்பியுள்ளார். 111 வயதில் மறைந்த கர்நாடக மடாதிபதி சிவகுமார சுவாமி உடலுக்கு பாரதிய ஜனதா சார்பில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், சதானந்தகவுடா ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள். அவரது உடலுக்கு பிரதமர் மோடி நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதது குறித்து காங்கிரஸ் சார்பில் கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து காங்கிரசை சேர்ந்த கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரதமர் மோடி நடிகர்- நடிகைகளின் திருமணங்களுக்கு போகிறார் என குற்றம்சாட்டினார்.,
பிரபலங்களை சந்திக்கிறார் எனவும் தெரிவித்தார். ஆனால் நமது கடவுளாக வாழ்ந்து மறைந்தவரின் இறுதிச்சடங்குக்கு வர முடியவில்லை என வருத்தம் தெரிவித்தார். தனது வாழ்க்கையை முழுமையாக ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்டோருக்காகவும் ஒதுக்கி பாடுபட்டு மறைந்துள்ளார் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி எனவும் கூறினார். அவருக்கு அஞ்சலி செலுத்த பிரதமருக்கு நேரம் இல்லையா? என கேள்வி எழுப்பினார். சாமியாருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை வீணாகி போய்விட்டது எனவும் கூறினார்.
மேலும் செய்திகள்
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுங்கள் : ராணுவத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு
ஐசிஐசிஐ வங்கியில் மோசடி விவகாரம் : சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்
உத்திரபிரதேசத்தில் தனியார் அடகு கடையில் ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
நாடு முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சத்தீஸ்கரில் வாகன சோதனையில் பிடிப்பட்டது ரூ.1.70 கோடி ஹவாலா பணம் : 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜசுக்கு இறுதி ஒப்புதல்
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு
உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி