வாழைத்தோட்டத்தை மிதித்து 4 யானைகள் அட்டகாசம் : விவசாயிகள் வேதனை
2019-01-24@ 14:16:43

ஓசூர்: ஓசூர் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தும் 4 யானைகளின் அட்டகாசத்தால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு, போடூர், பேரண்டப்பள்ளி உள்ளிட்ட வனப்பகுதிகளில் 4 யானைகள் முகாமிட்டுள்ளன. இவை கடந்த சில நாட்களாக கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் நேற்று யானைகள் பேரண்டாப்பள்ளி காட்டிற்குள் சென்றன. அங்கிருந்து இரவில் வெளியே வரும் யானைகள் அம்பட்டி, திருச்சிப்பள்ளி, தொரப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன.
அங்கு விவசாயிகள் பயிரிட்டிருந்த தக்காளி, கோஸ், வாழை, அவரை, தென்னை உள்ளிட்ட தோட்டத்தை நாசம் செய்தன. பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்தன. இதில் 8 ஏக்கர் பயிர்களை நாசம் செய்தன. பின்னர் யானைகள் அனைத்தும் பேரண்டாப்பள்ளி வனபகுதிக்குள் சென்று விட்டன. நேற்று காலை விவசாயிகள் தங்களின் விளைநிலங்களுக்கு சென்றனர். அப்போது பயிர்களை யானைகள் சேதப்படுத்தியிருந்ததை கண்டு வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஓசூர் அருகே சானமாவு மற்றும் போடூர்பள்ளம் காடுகளில் ஒரு மாதமாக யானைகள் முகாமிட்டுள்ளன. அவை விவசாய பயிர்களை தொடர்ந்து நாசம் செய்து வருகின்றன. இந்த யானைகளை வனத்துறையினர் விரட்டினாலும் மீண்டும் வந்து விடுகின்றன. கர்நாடகா வனப்பகுதியில் இருந்து வந்துள்ள யானைகளை நிரந்தரமாக கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு நிவாரணம் கிடைக்க உதவிட வேண்டும், என்றனர்.
மேலும் செய்திகள்
குமரி-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை: ரயில்வே இடத்தில் இருந்த 62 வீடுகள் அகற்றம்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் காயம்
ஹெச்ஐவி பாதித்த குழந்தை சிகிச்சையில் அலட்சியம்? கோவை அரசு மருத்துவமனை மீது பெற்றோர் புகார்
சிவகாசியில் பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து 7 பேர் குழு ஆய்வு
செவல்பட்டியில் நூலக கட்டிடத்தில் இயங்கும் பால்வாடி : இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு
புதுகை அருகே மாத்தூரில் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு கம்பெனிகள் மூடல் : 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு
உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி