SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மரக்காணம் பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் தர்பூசணி சாகுபடி : விவசாயிகள் ஆர்வம்

2019-01-24@ 14:15:19

மரக்காணம்: மரக்காணம் ஒன்றியத்தில் கந்தாடு, புதுப்பாக்கம், நடுக்குப்பம், வண்டிப்பாளையம், அடசல், சிறுவாடி, நகர், வட நெற்குணம், ஆலங்குப்பம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள பெரும்பாலானோர் விவசாயிகள். இவர்கள் தங்களது விளை நிலங்களில் நெல், கரும்பு, மரவள்ளி, மணிலா, வாழை போன்ற பயிர்களை நடவு செய்வது வழக்கம். இது போன்ற பயிர்களுக்கு நடவு செய்ததில் இருந்து அறுவடை காலம் வரையில் அதிகப்படியான தண்ணீர் தேவைப்படும். இதற்கு இப்பகுதியில் இருக்கும் ஏரி, குளம் போன்றவற்றில் நிரம்பி இருக்கும் நீரை விவசாயிகள் பாய்ச்சுவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழை பொய்த்துவிட்டது.

இதனால் விவசாயத்திற்கு பயன்படுத்தும் அனைத்து நீர் நிலைகளும் தண்ணீர் இல்லாமல் போயுள்ளது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இப்பகுதியில் இருக்கும் பெரும்பாலான விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிர் செய்யாமல் தரிசாக போட்டு விட்டனர். இந்நிலையில் தற்போது பெய்த பருவ மழையால் இப்பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் ஓரளவு நீர் நிரம்பி உள்ளது. இந்த நீரை பயன்படுத்தி விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் சொட்டு நீர் பாசனம் மூலம் தர்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த தர்பூசணி செடிகள் வளர்ந்து மூன்று மாதத்தில் அறுவடை செய்யப்படும் என விவசாயிகள் கூறுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

  • thaaymoli_thinam12

    உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • BeijingPalacelight

    வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்