ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுப்பு..... தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
2019-01-24@ 14:01:48

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி தராத தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை, சில நிபந்தனைகளுடன் மீண்டும் திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனையடுத்து ஆலையைத் திறக்கவும், மின்சாரம் வழங்கவும் அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் தமிழக அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. ஆனால் தமிழக அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை.
இதையடுத்து ஆலையைத் திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டும், ஆலையை திறக்க உத்தரவிடுவதற்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்து வருவதாக வேதாந்தா நிறுவனம் கூறியிருந்தது. இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வேதாந்தா நிறுவனம் சார்பில் தங்கள் தரப்பு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், போலீஸ் பாதுகாப்புடன் சென்று ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆலை பராமரிப்பு மற்றும் நிர்வாக ரீதியிலான பணிகளுக்கு மட்டுமே ஆலையை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் செய்திகள்
பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் தக்க பதிலடி கொடுங்கள் : ராணுவத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் உத்தரவு
ஐசிஐசிஐ வங்கியில் மோசடி விவகாரம் : சந்தா கோச்சாருக்கு எதிராக சிபிஐ லுக் அவுட் நோட்டீஸ்
உத்திரபிரதேசத்தில் தனியார் அடகு கடையில் ரூ.4.5 கோடி மதிப்பிலான தங்கம் கொள்ளை: மர்மநபர்கள் கைவரிசை
நாடு முழுவதும் உள்ள காஷ்மீர் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சத்தீஸ்கரில் வாகன சோதனையில் பிடிப்பட்டது ரூ.1.70 கோடி ஹவாலா பணம் : 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜசுக்கு இறுதி ஒப்புதல்
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு
உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி