61வது பழக்கண்காட்சிக்கு தயாராகி வரும் சிம்ஸ் பூங்கா : பராமரிப்பு பணி தீவிரம்
2019-01-24@ 13:02:45

குன்னூர்: குன்னூர், சிம்ஸ் பூங்காவில் 61வது பழக்கண்காட்சி மே மாதம் நடக்கிறது. இதற்காக மலர் செடிகள் நடவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நீலகிரி மாவட்டம் குன்னூரில் தோட்ட கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் பழக்கண்காட்சி நடத்தப்படுகிறது. அதேபோல் இந்தாண்டு 61வது பழக்கண்காட்சி வரும் மே மாதம் நடக்கிறது. இந்நிலையில் பழக் கண்காட்சியை முன்னிட்டு சிம்ஸ் பூங்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் மலர் செடிகள் நடவு செய்யப்பட உள்ளன.
இதற்காக அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சால்வியா, ஆன்ட்ரியம், பால்சம், பெகோனியா, மேரிகோல்டு, பிரன்ச் மேரிகோல்டு, பேன்சி ஃபிளக்ஸ், போன்ற 60க்கும் மேற்பட்ட செடி வகைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. மேலும், டேலியா மற்றும் ஃபிளாக்ஸ் செடிகளை தோட்ட கலைத்துறை உதவி இயக்குநர் ராஜ்கோபு நேற்று நடவு செய்து துவங்கி வைத்தார். தொடர்ந்து மலர்செடிகள் நடவு செய்யப்பட்டு அவற்றை இயற்கை வேளாண் முறை படி பராமரிக்கப்பட உள்ளது.
மேலும் செய்திகள்
குமரி-திருவனந்தபுரம் இடையே இரட்டை ரயில் பாதை: ரயில்வே இடத்தில் இருந்த 62 வீடுகள் அகற்றம்
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் காயம்
ஹெச்ஐவி பாதித்த குழந்தை சிகிச்சையில் அலட்சியம்? கோவை அரசு மருத்துவமனை மீது பெற்றோர் புகார்
சிவகாசியில் பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து 7 பேர் குழு ஆய்வு
செவல்பட்டியில் நூலக கட்டிடத்தில் இயங்கும் பால்வாடி : இடவசதியின்றி குழந்தைகள் தவிப்பு
புதுகை அருகே மாத்தூரில் விமானங்களின் உதிரி பாகங்கள் தயாரிப்பு கம்பெனிகள் மூடல் : 10 ஆயிரம் பேர் வேலையிழப்பு
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு
உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி
வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்
மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி