SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மண்டபம், பாம்பன் உள்ளிட்ட அரசு பஸ், டாஸ்மாக்கில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு

2019-01-24@ 13:01:57

மண்டபம்: பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். கடந்த 2017 நவம்பர் 8ம் தேதி பழயை 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. தற்போது புதிய 2000 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் உள்ளது. ஆனால் எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தற்போது 10 ரூபாய் நாணயங்கள் மதிப்பை இழந்து வருகிறது. மண்டபம், வேதாளை, பாம்பன் உள்ளிட்ட பல சில்லரை கடைகள், டாஸ்மாக் கடைகளிலும் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கின்றனர். இதுகுறித்து ரிசர்வ் வங்கி எச்சரித்தும், விளக்கம் அளித்த போதிலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து வருகின்றனர்.

இதுகுறித்து மண்டபத்தை சேர்ந்தவர் கூறும்போது, ‘பத்து ரூபாய் நோட்டுகள் புழகத்தில் உள்ளதால் சில வங்கிகளில் மற்றும் வர்த்தக கடைகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்து வருகின்றனர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேதாளையில் இருந்து மண்டபம் சென்ற மூதாட்டி அரசு பேருந்தில் 10 ரூபாய் நாணயம் கொடுத்து டிக்கெட் கேட்டதற்கு கண்டக்டர் 10 ரூபாய் நாணயம் செல்லாது என கூறி பேருந்தை விட்டு மூதாட்டியை இறக்கி விட்டார். இது வேதனையாக உள்ளது.

தனியார் கடைகள் மற்றும் சில்லரை கடைகளில் 10 ரூபாய் நாணயம் செல்லுமா செல்லாத என்ற அஞ்சத்தில் வாங்க மறுத்தாலும் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் மதுபான கடைகளில் 10 ரூபாய் நாணயம் வாங்க மறுப்பது வேடிக்கையாக உள்ளது. எனவே கலெக்டர் 10 ரூபாய் நாணயம் செல்லுமா, செல்லாத என்ற அச்சத்தை போக்க வேண்டும். 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழகம் மற்றும் மதுபான கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

  • thaaymoli_thinam12

    உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • BeijingPalacelight

    வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்