SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

புதுச்சேரியில் மதுக்கடையில் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் : போலீசார் விசாரணை

2019-01-24@ 12:42:31

புதுச்சேரி : புதுச்சேரி திருக்கனூர் பகுதியில் உள்ள மதுக்கடை ஒன்றில் மர்மநபர்கள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடையை நடத்தி வரும் பாண்டி என்பவர் நேற்று இரவு 10.30 மணியளவில் கடையை அடைத்துவிட்டு சென்றுள்ளார். இதனையடுத்து இன்று காலை கடைக்கு வெளியே வெடிகுண்டு வீசியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கடைக்கு முன்னர் இறங்கி கையில் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை வீசிய காட்சி பதிவாகியுள்ளது. கடையின் ஷெட்டரில் அந்த வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளது. அந்நேரம் கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழில் போட்டி அல்லது முன் விரோதம் காரணமாக வெடி குண்டு வீசியிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

  • thaaymoli_thinam12

    உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • BeijingPalacelight

    வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்