SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிக பண பரிவர்த்தனை செய்தும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லையா?

2019-01-24@ 01:15:39

புதுடெல்லி: வருமானவரித்துறையிடம் இருந்து எஸ்எம்எஸ் வந்த பிறகும் வருமான வரி தாக்கல் செய்யாதவர்களுக்கு 21 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். அதன்பிறகும் தாக்கல் செய்ய தவறினால் சட்ட நடவடிக்கை பாயும் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய தவறியவர்களுக்கு வருமான வரித்துறை எஸ்எம்எஸ் அனுப்பி நினைவூட்டி வருகிறது. குறிப்பாக, அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனை செய்தும் கணக்கு தாக்கல் செய்யாமல் நழுவியவர்களை கண்காணித்து வருகிறது. இவர்கள் வருமான வரித்துறையிடம் இருந்து எஸ்எம்எஸ் வந்த பிறகு 21 நாட்களுக்குள் கணக்கு தாக்கல் செய்யலாம் என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

 இதுகுறித்து இந்த ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், 2017-18 நிதியாண்டில் அதிக மதிப்பிலான பண பரிவர்த்தனை செய்த பலர், 2018-19 கணக்கீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை. இவர்களுக்கு வருமான வரித்துறை எஸ்எம்எஸ் வந்த பிறகு 21 நாட்களுக்குள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அல்லது உரிய காரணத்தை மேற்கண்ட அவகாசத்துக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். தவறியவர்கள் மீது வருமான வரிச்சட்டம் 1961 பிரிவுகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 
 உயர் மதிப்பிலான பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தும் நிதி பரிவர்த்தனை அறிக்கை, டிடிஎஸ், சிசிஎஸ், வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகள், ஏற்றுமதி மறறும் இறக்குமதி விவரங்கள் மூலம் பெறப்படுகிறது. இவற்றின் மூலம், கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் மேற்கொண்ட பரிவர்த்தனை விவரங்களை வருமான வரித்துறை ஆராய்ந்து வருகிறது. வருமான வரித்துறைக்கு சரியான விளக்கம் அளித்தால் நடவடிக்கை வராது என மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-04-2019

    26-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • srilanka_chri11

    கிறிஸ்தவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் நிற்போம் : இலங்கை தாக்குதலை கண்டித்து இந்தியாவின் பல்வேறு மத குழுக்கள் ஆர்ப்பாட்டம்

  • india_medals11

    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : 3 தங்கம், 8 வெள்ளி, 7 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்!!

  • pudin_russiaa1

    வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய அதிபர் புதினுடன், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் பேச்சுவார்த்தை

  • shadow_111

    பூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்