SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தண்ணீர் பற்றாக்குறையால் வராக்கடன் அதிகரிக்கும் : உலக வன விலங்கு நிதியம் ஆய்வில் எச்சரிக்கை

2019-01-24@ 01:13:59

புதுடெல்லி: தண்ணீர் பற்றாக்குறையால் வங்கிகளின் வராக்கடன் அதிகரிக்கும் என உலக வன விலங்கு நிதியம் தெரிவித்துள்ளது.வராக்கடன் அதிகரிப்பால் வங்கிகளின் நிதி நிலை தள்ளாட்டத்தில் உள்ளது. இவற்றை மீட்க வங்கிகளுக்கு மத்திய அரசு மூலதன நிதி வழங்கி வருகிறது. கடன் வசூலிக்க முடியாததால் வராக்கடன் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை.

இந்நிலையில், தண்ணீர் பற்றாக்குறையால் வராக்கடன் அதிகரிக்கும் என உலக வன விலங்கு நிதியம் தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகள் சங்கத்துடன் இணைந்து இந்த அமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையில்,  தண்ணீர் பற்றாக்குறை விவசாயம் மற்றும் வேளாண் துறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். வங்கிகள் வழங்கிய மொத்த கடனில் ஏறக்குறைய 40 சதவீதம் நீர் ஆதாரத்தை நம்பியுள்ள துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.  இதனால் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வராக்கடன் விகிதம் அதிகரிக்கும் அபாயம் உளளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த நீடித்த தண்ணீர் மேலாண்மையை உருவாக்க வேண்டும். இதனால் வராக்கடன் அதிகரிக்கும் நிலை தடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

  • thaaymoli_thinam12

    உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • BeijingPalacelight

    வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்