SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரூ,5 கோடியுடன் டெல்லி முதலிடம் சென்னையில் அதிகபட்ச வீட்டுக்கடன் ரூ.2.2 கோடி

2019-01-24@ 01:12:48

புதுடெல்லி:  எப்படியும் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலரது கனவாக மட்டுமல்ல, சபதமாகவே மாறியிருக்கிறது. குறிப்பாக நகரங்களில் வாடகை அதிகரிப்பு, வீட்டு உரிமையாளர்கள் கெடுபிடிகள்தான் இதற்கு காரணம். கடன் வாங்காமல் இது சாத்தியமாவதில்லை. சிலர் பில்டர்கள் மூலமாகவும், நேரடியாகவும் வங்கிகளை அணுகி கடன் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். ஆன்லைனிலும் கடன் கோரி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. சில ஆன்லைன் இணையதளங்கள் வங்கிகளின் வட்டி விகிதம் சலுகைகளை பட்டியலிட்டு உதவுகின்றன.

 இத்தகைய ஆன்லைன் நிறுவனம் ஒன்று, நகரம் வாரியாக அதிகபட்ச மற்றும் சராசரி கடன் விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, டெல்லி முதலிடத்தில் உள்ளது. இங்கு வீட்டுக்கடனாக வாங்கப்பட்ட அதிகபட்ச கடன் ெதாகை ₹5 கோடி. இதற்கு அடுத்த இடங்களில் சென்னை (₹2.2 கோடி), பெங்களூரு (₹1.5 கோடி), மும்பை (₹1.8 கோடி ) உள்ளன.
 தனிநபர் கடன்களில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. இங்கு அதிகபட்ச தனிநபர் கடன் ₹47.2 லட்சம் வாங்கப்பட்டுள்ளது. மும்பை (₹40 லட்சம்), கொல்கத்தா (₹30 லட்சம்), டெல்லி ₹26 லட்சம்), சென்னை (₹25 லட்சம் ) என அடுத்தடுத்த இடங்களில் உள்ளன சராசரி தனிநபர் தொகை பெங்களூருவில் ₹2.7 லட்சம், மும்பையில் ₹2.8 லட்சம், கொல்கத்தாவில் ₹2.4 லட்சம், டெல்லியில் ₹2.4 லட்சம், சென்னையில் ₹2.7 லட்சம் என உள்ளது.

 இதுகுறித்து புள்ளி விவரம் வெளியிட்ட நிறுவன அதிகாரி கூறுகையில், ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்ட 16 லட்சம் விண்ணப்பங்களின் அடிப்படையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நேரடியாக விண்ணப்பங்கள் சமர்ப்பித்து வாங்குவோர் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இவ்வாறு வாங்கப்படும் கடன் விவரங்கள் வெளிப்படையாக தெரிவதில்லை. எனவே, மேற்கண்ட புள்ளி விவரத்தில் குறிப்பிட்டதை விட அதிக பட்ச கடன் தொகை நேரடியாக அணுகி வாங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

அதிகபட்ச வீட்டுக்கடன்
டெல்லி    ₹5 கோடி
சென்னை    ₹2.2 கோடி
பெங்களூரு    ₹1.5 கோடி
மும்பை    ₹1.8 கோடி
தனிநபர் கடன்
பெங்களூரு    ₹47 லட்சம்
மும்பை    ₹40 லட்சம்
கொல்கத்தா    ₹30 லட்சம்
டெல்லி    ₹26 லட்சம்
சென்னை    ₹25 லட்சம்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chinadance

    சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்

  • Autoshow2019

    கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு

  • thaaymoli_thinam12

    உலக தாய் மொழி தினம் : தமிழ் வழி கல்வியை வலியுறுத்தி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

  • BeijingPalacelight

    வண்ண விளக்குகளால் ஜொலித்த பெய்ஜிங் அரண்மனை அருங்காட்சியகம்

  • mumbai_vivasayigal11

    மத்திய மாநில அரசுகளை மிரள வைக்கும் வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 180 கிலோ மீட்டர் தூர மாபெரும் பேரணி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்