SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிப்பதா?: வைகோ கண்டனம்

2019-01-24@ 01:01:10

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மிரட்டிப்பணிய வைக்க நினைப்பதற்கும், அடக்குமுறையை ஏவத் துடிப்பதற்கும் மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஜாக்டோ - ஜியோ சார்பில் ஜனவரி 22ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. ஜாக்டோ - ஜியோ அமைப்பில் இடம்பெற்றுள்ள அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கிய 7 லட்சம் ஊழியர்களைக் கொண்ட 114 சங்கங்களும், 5  லட்சம் ஆசிரியர்களை உள்ளடக்கிய 51 ஆசிரியர் சங்கங்களும் காலவரையற்ற வேலை நிறுத்த அறப்போராட்டத்தை நடத்தப் போவதாக முறைப்படி  அறிவித்தபோதும், தமிழக அரசு அவர்களை அழைத்துப் பேச முயற்சிக்காமல் அலட்சியப்படுத்தியது.தமிழக அரசு இன்னும் பிடிவாதமாக மறுத்து வருவது ஏற்புடையது அல்ல. உடனடியாக பழைய ஓய்வூதியத்தைச் செயல்படுத்த எடப்பாடி பழனிசாமி அரசு  ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 7வது ஊதியக் குழு டைமுறைப்படுத்தப்பட்டதில் உள்ள முரண்பாடுகளைக் களைதல், சிறப்பு  காலமுறை ஊதியம் பெற்று வரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் நிர்ணயித்தல், 3500 தொடக்கப்பள்ளிகளை உயர்நிலை -  மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச  கோரிக்கைகளை ஜாக்டோ - ஜியோ முன்வைத்துள்ளது.

மாணவர்களுக்கு 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அறப்போராட்டத்தில் இறங்கி உள்ளதை தமிழக அரசு  உணர்ந்ததாக தெரியவில்லை. ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிசாமி அரசு, அவர் கொடுத்த வாக்குறுதிகளை  நிறைவேற்ற முன்வராமல், போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை மிரட்டிப் பணிய வைக்க நினைப்பதும், அடக்குமுறையை ஏவத் துடிப்பதும் கடுமையான  கண்டனத்துக்கு உரியதாகும். அறப்போராட்டக் களத்தில் உள்ள அரசு ஊழியர்கள் - ஆசிரியர் சங்கங்களை அழைத்துப் பேசி, அவர்களது நியாயமான  கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • beijingroboshow

    பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

  • syriaairstrike

    சிரிய எல்லையில் அந்நாட்டு ராணுவம் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்...மூவர் பலி;அச்சத்தில் மக்கள்: காட்சித்தொகுப்பு!

  • boliviafire

    பொலிவியாவில் பரவிய காட்டுத்தீ: 4 லட்சம் ஹெக்டர் பரப்பளவு தீயில் கருகி நாசம்!

  • russiatomatofight

    ரஷ்யாவில் நடைபெற்ற தக்காளி சண்டை நிகழ்ச்சி: பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  • yamunariver20

    கரைபுரண்டோடும் வெள்ளத்தால் அபாய நிலையை எட்டியது யமுனா நதி: கரையோர மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்