SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பொய்யை சொல்லி நான்கரை ஆண்டு ஆட்சி நடத்தி விட்டார் மோடி: நாராயணசாமி பேட்டி

2019-01-24@ 01:00:01

சென்னை: பிரதமர் மோடி பொய்யை  சொல்லியே, நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி நடத்திவிட்டார். இனியும் மக்கள், அவரை நம்ப தயாராக இல்லை என புதுவை  முதல்வர் நாராயணசாமி கூறினார்.புதுவை முதல்வர் நாராயணசாமி, டெல்லியில் இருந்து நேற்று காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி.தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதன் மூலம் பல லட்சம் கோடி, தமிழகத்துக்கு கிடைக்கும் என நம்பி  முதல் மாநாட்டை நடத்தினார். அதைபோல், இப்போதும் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகின்றனர். அதிகளவில் முதலீடு வந்தால் நல்லதுதான்.புதுவை மாநிலத்தில், இதுபோல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வரும் பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவில் வாக்குச்சீட்டு முறையை நடத்தி, ஒரு வெளிப்படையான தேர்தலை நடத்துவதற்கு, தேர்தல் ஆணையம் தயாராக வேண்டும். கடந்த நான்கரை  ஆண்டுகளாக காங்கிரசை குறை சொல்வதை தவிர, பாஜ வேறு எதையும் செய்யவில்லை. பிரதமர் மோடி, வெளிநாடுகள் சென்றாலும், காங்கிரசை திட்டுவார். இந்தியாவில் எந்த விழாக்கள் நடந்தாலும், அதிலும் காங்கிரசை குறை சொல்வதுதான் அவர் வேலை. காங்கிரசை குறை சொல்வதை தவிர வேறு எந்த  திட்டத்தையும் அவர்கள் செயல்படுத்தவில்லை. நாட்டின் வளர்ச்சியில் அவர்கள் கவனம் செலுத்தவில்லை. அவர்கள் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தும்  தோல்வியடைந்துள்ளன. இப்படி பொய்யை  சொல்லி, கடந்த நான்கரை ஆண்டுகாலம் மோடி ஆட்சி நடத்திவிட்டார். இனியும் மக்கள், அவரை நம்ப தயாராக இல்லை  என்றார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

  • china_lamfesti1

    சீனாவில் விளக்குத் திருவிழா : டிராகன், பீனிக்ஸ், பன்றிகளை போல் உருவாக்கப்பட்ட விளக்குகள் காண்போரை கவர்ந்தது

  • 2mili_nall

    காஷ்மீரில் வீரமரணம் அடைந்த மேஜர் விஎஸ் தவுன்டியால், காவலர் அப்துல் ரஷித் உடல்கள் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

  • pakisthan_saudi1

    பாகிஸ்தானில் சவுதி இளவரசர் சுற்றுப்பயணம் : நாட்டின் மிக உயரிய ‘நிஷான்-இ-பாகிஸ்தான்’ விருது இளவரசருக்கு அளிக்கப்பட்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்