SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஜிபியை நேரடியாக தொடர்பு கொள்ள இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்களுக்கு தனி இ-மெயில் ஐடி துவக்கம்: ரகசிய தகவல் வெளியாவதை தடுக்க நடவடிக்கை

2019-01-24@ 00:58:12

வேலூர்: தமிழக காவல்துறையில் டிஜிபி நேரடியாக தொடர்பு கொள்ள இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் அளவிலான போலீஸ் அதிகாரிகளுக்கு தனி மெயில் ஐடி  தொடங்கப்பட்டுள்ளது. இது காவல்துறையின் ரகசியங்கள் வெளியாவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்று போலீஸ் உயர் அதிகாரிகள்  தெரிவித்தனர். தமிழக காவல்துறை டிஜிபி தலைமையில் இயங்கி வருகிறது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய நகரங்களில் போலீஸ் கமிஷனர்கள்  கட்டுப்பாட்டிலும், வடக்கு, மைய, மேற்கு, தெற்கு என்று 4 காவல் மண்டலங்கள் ஐஜிக்கள் தலைமையிலும் இயங்கி வருகின்றன. அதேபோல் 32 மாவட்டங்கள்  எஸ்பிக்கள் தலைமையில் இயங்குகின்றன. இவர்களுக்கு கீழ் ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐகள், இதர காவலர்கள் என்று சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான காவலர்கள்  பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, தனிப்பிரிவு, அதிவிரைவுப்படை, நக்சல் தடுப்பு பிரிவு, பெண்கள் வன்கொடுமை தடுப்பு பிரிவு  என்று பல்வேறு பிரிவுகளின் கீழ் பணிபுரிந்து வருகின்றனர்.

டிஜிபி ஏதேனும் காவல்துறை தொடர்பான ரகசிய தகவல்களை தெரிவிக்கும்போது, அவை  வெளியாவதாக புகார்கள் எழுந்தது. இப்படி ரகசியங்கள் வெளியாவதை  தடுக்கும் விதமாகவும், டிஜிபி நேரடியாக அனைத்து மாவட்டங்களில் பணிபுரியும், இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் அளவிலான போலீஸ் அதிகாரிகளுக்கு  நேரடியாக தகவல்கள் தெரிவிக்கவும் தனி மெயில் ஐடி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிஜிபி சம்பந்தப்பட்ட டிஐஜி, எஸ்பிக்களுக்கு ஏதேனும் தகவல் அனுப்பும்போது பயன்படுத்தப்படும் காகிதம், ஜெராக்ஸ் போன்றவற்றின் தேவை  இருக்காது. இதற்காக சென்னையில்டிஜிபி கட்டுப்பாட்டில் இ ஆபீஸ் தொடங்கப்பட்டுள்ளது. இனி, டிஜிபி தமிழகத்தில் அனைத்து மாவட்ட இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் அளவிலான போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல்கள் பரிமாறி கொள்ள  முடியும். இதற்காக nic என்ற சாப்ட்வேர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போலீசார் தங்களது விவரங்களை பதிவு செய்து மெயில் ஐடி  உருவாக்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

  • thirunangai

    கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

  • chinaboat

    உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்