SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு மார்ச் மூன்றாம் தேதி கூடுகிறது - விஷால் தகவல்

2019-01-24@ 00:56:30

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் மாஸ்டர் யூனிட்  அமைத்துள்ளது. இது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தயாராகும் படங்களை திரையரங்கில் திரையிட வசதியாக மைக்ரோமேக்ஸ் தொழில்நுட்பத்திற்கு மாற்றிக்கொடுக்கும் அமைப்பாகும். இதன் திறப்பு நேற்று விழா  நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஆண்டுக்கு சுமார் ஆயிரம் கோடி ரூபாய் புரளும் இந்த தொழிலில் இது தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு மைல் கல்லாகும். தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு வருகிற மார்ச் 3ம் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்தில் அனைத்து கணக்குகளும் சமர்ப்பிக்கப்படும். தயாரிப்பாளர் சங்கத்தின்  தேர்தல் அதன்பிறகு நடக்கும். தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம்.
இவ்வாறு விஷால் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 26-08-2019

    26-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 25-08-2019

    25-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 24-08-2019

    24-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • FloatingNuclearPlant23

    ரஷ்யாவில் உருவாக்கப்பட்டுள்ள உலகின் முதல் மிதக்கும் அணு ஆயுத ஆலை: தனது முதல் பயணத்தை தொடங்கியது..!

  • robo

    பெய்ஜிங்கில் நடைபெற்ற 2019 உலக ரோபோ மாநாடு: தொழிற்துறை, பயோனிக் ரோபோ மீன் உள்ளிட்டவை காட்சிக்கு வைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்