SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை, கோவை உட்பட 6 அரசு மருத்துவமனையில் செயற்கை முறை கருத்தரித்தல் மையம்

2019-01-24@ 00:56:16

கோவை: தமிழகத்தில் கோவை அரசு மருத்துவமனை உட்பட ஆறு அரசு மருத்துவமனையில் செயற்கை முறை கருத்தரித்தல் மையம் துவங்க நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் தம்பதிகள் எந்திரமாக செயல்படுகின்றனர். இதனால், திருமணமாகியும் நீண்ட ஆண்டுகளாக குழந்தை  பேறு கிடைக்காத தம்பதிகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. நகரத்தில் 20 சதவீத குடும்பங்களில் குழந்தை இல்லாமல் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம்  தெரிவிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் தனியார் செயற்கை கருத்தரித்தல் மையங்கள் அதிகரித்து வருகிறது. இந்த  மையங்களுக்கு சென்றால் அதிகம் செலவாகிறது. பொதுவாக, கரு குழாயில் அடைப்பு, தொற்று, கர்ப்பப்பை பிரச்னை, கரு முட்டை வளர்வதில் சிக்கல் உள்ளிட்ட காரணத்தினால் கருதரித்தலில் பிரச்னை ஏற்படுகிறது  என மகப்பேறு அரசு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் செயற்கை முறை கருத்தரித்தல் மையங்கள் இல்லை. இதனால், தனியார்  கருத்தரித்தல் மையத்தை செல்ல வேண்டிய நிலை இருக்கிறது.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 6 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில்  செயற்கை முறை கருத்தரித்தல் மையத்தை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனையின் டீன் அசோகன் கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் செயற்கை முறை கருத்தரித்தல் மையம் துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால், செயற்கை கருத்தரித்தல் மையம்  விரைவில் துவங்கப்படும். கர்ப்பபை பிரச்னை, கருப்பையில் கட்டி, கருக்குழாயில் அடைப்பு போன்றவையால் பாதிக்கப்பட்டு, குழந்தை பிறக்க முடியாத  தம்பதிகளுக்கும் குழந்தை பேறு கிடைக்க இந்த மையம் வழி செய்யும். தம்பதிகளுக்கு கவுன்சலிங் வழங்கப்படும். இது கோவை மண்டலத்தை சேர்ந்த  தம்பதிகளுக்கு மிகுந்த பயனளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • rally

    சீனாவில் அமைதியை நிலை நிறுத்தும் வகையில் நடைபெற்ற பேரணி: லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு

  • slide

    சீனாவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த வாட்டர் ஸ்லைடு பூங்கா: புகைப்படங்கள்

  • torch

    சீனாவில் நடைபெற்ற டார்ச் திருவிழா: நாட்டுப்புற பாடல்கள் பாடியும், நடனமாடியும் மக்கள் உற்சாகம்

  • statue

    சாலைகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகள் உயிர் பெற்றால் எப்படியிருக்கும்? என்ற கற்பனைக்கு உயிர் கொடுத்தனர் பெல்ஜியம் சித்திரக் கலைஞர்கள்

  • fire

    லண்டனில் உள்ள ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து: அருகில் உள்ள மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்