SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நடந்ததா? குற்றாலநாதர் கோயிலில் நள்ளிரவு கதவுகளை மூடி ரகசிய யாகம்: ஆகம விதி மீறியதாக பக்தர்கள் புகார்

2019-01-24@ 00:53:58

தென்காசி: குற்றாலம், குற்றாலநாதர் சுவாமி கோயிலில் நள்ளிரவு கதவுகளை மூடி ரகசிய யாகம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும்  கட்சிக்கு ஆதரவாகவே இந்த ரகசிய யாகம் ஆகம விதிகளுக்கு முரணாக நடத்தப்பட்டுள்ளது என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.  சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலக அறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரகசிய யாகம் நடந்ததாக கூறப்பட்டது.  இதுகுறித்து தகவல் வெளியானதையடுத்து அறையை சீரமைத்ததாக ஓபிஎஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் மிகவும் பழமை வாய்ந்த தலமான நெல்லை மாவட்டம், குற்றாலம் திருக்குற்றாலநாதர் சுவாமி கோயிலில் கடந்த இரண்டு  தினங்களாக கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த குமார் நம்பூதிரி தலைமையில் 4 பேர் வந்து ரகசிய யாகம் நடத்தியுள்ளனர். குற்றாலநாதர் கோயில் பராசக்தி  சன்னதியில் கதவுகளை மூடி இந்த யாகம் நடத்துள்ளது. நேற்று முன்தினம் இரவு தொடங்கி நள்ளிரவு வரை இந்த யாகம் நடைபெற்றுள்ளது. நேற்று காலையில் மீண்டும் தொடர்ந்த யாகம் மதியம் வரை நடந்துள்ளது. அப்போது சுதர்ஸன யாகம் மற்றும் பிரத்தியங்கரா யாகம் ஆகியவையும் நடத்தப்பட்டதாக  தெரிகிறது. இவை பெரும்பாலும் எதிரிகளை வெல்வதற்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் நடத்தப்படுவது ஆகும். அறநிலையத்துறை  கட்டுப்பாட்டில் உள்ள கோயிலில் ரகசிய யாகம் நடத்துவது ஆளுகின்றவர்களுக்காகத்தான் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் பக்தர்கள்  மத்தியில் உள்ளது.

 கோயிலில் ரகசிய யாகம் குறித்து தகவல் அறிந்ததும் சிவனடியார்கள் அறக்கட்டளையின் மாநில செயலாளர் மேலகரம் ஈஸ்வரன் தலைமையில் பக்தர்கள்  திரண்டு நம்பூதிரிகளிடம் விளக்கம் கோரினர். அப்போது குற்றால அருவிகளில் நடந்த துர்மரணம் மற்றும் கோயில் பணியாளர்களின் மரணத்திற்கு  பரிகாரம் செய்வதற்காகவும், உலக அமைதி வேண்டியும் யாகம் நடத்தியதாக தெரிவித்தனர். இதுகுறித்த ஈஸ்வரன் நிருபர்களிடம் கூறுகையில், ‘குற்றாலநாதர் கோயிலில் ஆகம விதிகளுக்கு புறம்பாக யாகம் நடந்துள்ளது. கோயில் அறையில்  ஆவிகளை வரவழைத்து யாகம் நடத்துவது உள்ளே இருக்கும் சுவாமியின் சக்தியை கேள்விக்குறியாக்கும் செயல். இது பொது நன்மைக்காக நடத்தப்பட்ட யாகம்  எனில் அனைவரையும் அழைத்து நடத்தியிருக்கலாம். ஆனால் இரவு 8 மணிக்கு பிறகு கோயில் கதவுகளை அடைத்து விட்டு ஒரு சிலர் மட்டுமே இருந்து ரகசியமாக  யாகம் நடத்துவது ஏன் என்று தெரியவில்லை. அதிலும் கோயில் நிர்வாக அதிகாரியின் உறவினர்கள் கலந்துகொண்டது எந்த விதத்தில் நியாயம்?  இதற்கு உரிய  விளக்கம் தரவேண்டும். இது போன்று புராதனமான கோயில்களை தனிப்பட்ட விருப்பங்களுக்காக நடத்துவது தவிர்க்கப்பட வேண்டும். ஆகம் விதிகளை  மீறுகின்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். குற்றாலநாதர் கோயிலில் ஆகம விதிகளுக்கு புறம்பாக கதவை அடைத்து விட்டு நடத்திய ரகசிய யாகம் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • africaslavarieshouse

  1,700ம் நூற்றாண்டுகளில் ஆப்பிரிக்காவில் அடிமைகளுக்காக உருவாக்கப்பட்ட பகுதி: மக்களின் பார்வைக்கு திறப்பு

 • southwestchinaflo

  தென்மேற்கு சீனாவில் கனமழை, வெள்ளத்தால் நிலச்சரிவு: மேம்பாலம் உடைந்ததால் மக்கள் அவதி!

 • turkeyprotest

  துருக்கியில் மேயர்களை பணிநீக்கம் செய்ததற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்: தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டிய போலீசார்

 • 21-08-2019

  21-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • beijingroboshow

  பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ரோபோ மாநாடு: மருத்துவத்துறை, தீயணைப்பு துறைக்கான புதிய ரோபோக்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்