பறிமுதலான பைக்கை போலி நம்பரை எழுதி பயன்படுத்திய கில்லாடி எஸ்.எஸ்.ஐ
2019-01-24@ 00:52:34

ஒரத்தநாடு: கூலிப்படையினரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக்கில் போலியான பதிவு எண்ணை பயன்படுத்தி ஓட்டி வந்த எஸ்எஸ்ஐ இடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போலீஸ் சூப்பிரண்டின் தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக (எஸ்எஸ்ஐ) பணியாற்றி வரும் ஒருவர், குற்ற பின்னணியில் தொடர்புடைய ஒரு மோட்டார் சைக்கிளை போலியான பதிவு எண்ணை பயன்படுத்தி போலீஸ் ஸ்டிக்கருடன் ஓட்டி வருவதாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த 21ம் தேதி இரவு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார், ஒரத்தநாடு போலீஸ் நிலையத்துக்கு சென்று தனிப்பிரிவு எஸ்எஸ்ஐ வசமிருந்த மோட்டார் சைக்கிளை கைப்பற்றி, அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரத்தநாடு அடுத்த வன்னிப்பட்டு கிராமத்தில் சிக்கிய கூலிப்படையினரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிளை போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி போலியான பதிவு எண்ணை பயன்படுத்தி இயக்கி வந்ததை எஸ்எஸ்ஐ இளங்கோவன் ஒப்பு கொண்டுள்ளார். இதைதொடர்ந்து அந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீசார், விசாரணை அறிக்கையை எஸ்பியிடம் சமர்ப்பித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் எஸ்பி மகேஸ்வரன், இளங்கோவனை சேதுபாவாசத்திரம் போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
திப்பம்பட்டியிலிருந்து 15 கி.மீ., தூரத்திற்கு புறவழிச்சாலையில் மின் விளக்கு இல்லை
விருதுநகர் புதிய பஸ்நிலையத்தில் இடிந்து விழும் கைப்பிடிச் சுவர்கள்
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தமிழக வீரர்கள் உடல்கள் திருச்சி வந்தது; நிர்மலா சீதாராமன், அமைச்சர்கள் அஞ்சலி
கரையும் காரைகள்... விரிவடையும் விரிசல்கள்... பராமரிப்பு இல்லாத கட்டிடத்தில் சிகிச்சை பெறும் பாலகர்கள்
திண்டிவனம் அருகே அரசு பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதல் : ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி
தற்கொலைப் படை தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அக்னிதீர்த்த கடலில் மலரஞ்சலி
16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்
பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு
முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு
டெல்லியில் ட்ரெயின் 18 'வந்தேபாரத் எக்ஸ்பிரஸ்'- ஐ கொடியசைத்து துவக்கி வைத்தார் பிரதமர் மோடி