SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஐ.எஸ் தீவிரவாதிகள் 9 பேர் கைது - பயங்கர தாக்குதல் சதி முறியடிப்பு : தீவிரவாத தடுப்புப்படை போலீசார் பரபரப்பு தகவல்

2019-01-24@ 00:42:05

மும்பை: ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என கைது செய்யப்பட்ட 9 பேரிடம் இருந்து, ரசாயனம், பல பாட்டில் திராவகம், கூர்மையான கத்திகள், செல்போன்கள், சிம் கார்டுகள் ஆகிய கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் மகாராஷ்டிராவின் பல இடங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாகவும் இவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் பயங்கரத் தாக்குதல் சதி திட்டம் முறியடிக்கப்பட்டிருப்பதாகவும் தீவிரவாத தடுப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.சல்மான் கான், பகத்ஷா, ஜாமேன் குத்தேபாடி, மொஷின் கான், முகமது ஷேக், தக்கி கான், சர்பராஸ் அகமத், ஜாகித் ஷேக் மற்றும் 17 வயது மைனர் ஆகிய 9 பேரை சமீபத்தில் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப்படை சமீபத்தில் கைது செய்தது. ரகசிய தகவல் ஒன்றை தொடர்ந்து இவர்களை பல வாரங்களாக மகாராஷ்டிரா மாநில தீவிரவாத தடுப்பு படையினர் கண்காணித்து வந்தனர். தானே மாவட்டத்தில் உள்ள  மும்ப்ரா மற்றும் அவுரங்காபாத்தில் இவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.

இதனை நேற்று முன்தினம் காலை, மும்ப்ராவில் உள்ள அம்ருத் நகர், கவுசா, மோதி பாக் மற்றும் அல்மாஸ் காலனி ஆகிய இடங்களிலும், அவுரங்காபாத்தில் உள்ள கைசர் காலனி, ரகத் காலனி மற்றும் தம்டி மகால் பகுதிகளிலும் அதிரடி சோதனை நடத்திய அதிகாரிகள் 9 பேரையும் கைது செய்தனர். 9 பேரும் பல இடங்களில் தாக்குதல் நடத்துவதற்காக வெடிமருந்துகளை சேகரித்துக் கொண்டிருந்தது விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறினர். ஆனால் தாக்குதல் நடத்துவதற்கு முன்பு அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் 9 பேரும் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான முகமத் மசார் ஷேக் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ஆவார். பிவண்டியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த அவரை மசூதி ஒன்றில் சந்தித்த மொஷின், தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தார். சிவில் இன்ஜினியரான பகத் ஷாவை மும்ப்ராவில் உள்ள மசூதி ஒன்றில் வைத்து சல்மான் சந்தித்து தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தார்.

கைதானவர்களில் 17 வயது மைனர் மின்னணு துறையில் டிப்ளோமா படித்தவர். தகவல் தொழில்நுட்பத் துறையில் அறிவியல் படித்தவர்.  குத்தேபாடி மருந்து கம்பெனியின் பிரதிநிதியாக வேலை பார்த்தவர். ரசாயனத்துறை பற்றி நன்கு தெரிந்தவர். அதனால்தான் அவர் தீவிரவாத  இயக்கத்தில் சேர்க்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். சர்பராஸ் அகமத் அவுரங்காபாத்தை சேர்ந்தவர். இவர் மொஷினின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது.. அவுரங்காபாத்தில் தீவிரவாத இயக்கத்தில் சேர்க்க கூடிய இளைஞர்கள் அடையாளம் கண்டுபிடித்து மொஷினுக்கு தகவல் தெரிவிப்பது இவருடைய வேலையாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 19-04-2019

  19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • 18-04-2019

  18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • chinaautoshow

  சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

 • thirunangai

  கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா...சுவாமி திருக்கண் திறக்கும் நிகழ்ச்சியில் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள்

 • chinaboat

  உலகிலேயே நிலத்திலும், நீரிலும் செல்லும் படகை தயாரித்து சீனா சாதனை: சோதனை ஓட்டம் வெற்றி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்