SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறையில் இருதய நோயால் அவதி பாக். முன்னாள் பிரதமர் ஷெரீப் உடல்நிலை பாதிப்பு

2019-01-24@ 00:25:59

லாகூர்,: முறைகேடாக சொத்து வாங்கியது தொடர்பாக சிறை தண்டனை அனுபவித்து வரும் பாகிஸ்தானி–்ன்  முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, ேகாட் லக்பாட்டில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது உடனே அவர், லாகூரிலுள்ள பஞ்சாப் இருதய மருத்துவமனைக்கு கொண்டு  செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சைக்கு பின் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவருடைய நிலைமை மிகவும் ேமாசமாக உள்ளதாகவும், உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் ஷெரீப்பின் இருதய நோய் மருத்துவரான ஆதான் கான் தெரிவித்துள்ளார். நவாஸ் ஷெரீப்புக்கு ஏற்கனவே 2 முறை இதய அறுவை சிகிச்சை நடந்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chinaautoshow

    சீனாவில் நடைபெற்ற ஆட்டோ ஷோ 2019: BMW, Mercedes-Benz நிறுவனங்களின் புதிய கார்கள் அறிமுகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்